ஹாப்பி நியூஸ்…! சிஎஸ் கண்டிப்பா இந்த ஆண்டு Play Off- க்கு உறுதி..!! சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்…!

ஹாப்பி நியூஸ்…! சிஎஸ் கண்டிப்பா இந்த ஆண்டு Play Off- க்கு உறுதி..!! சிஎஸ்கே ரசிகர்கள் கொண்டாட்டம்…!

ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2021 நேற்று ஆரம்பித்துள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். இந்தியாவில் 2008ஆம் ஆண்டு ஆரம்பித்த ஐபிஎல் போட்டி மக்களின் ஆதரவை பெற்று எல்ல ஆண்டுகளும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு நாட்டில் நாட்டில் நடந்துள்ளது. அப்பொழுது நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் பல மோசமான தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி சிஎஸ்கே அணியின் வீரர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2020 போட்டியில் நிச்சியமாக காம்பேக் தர வேண்டும் என்று சிஎஸ்கே வீரர்கள் சிறப்பான பயிற்சி செய்து வருகின்றனர். ஏனென்றால் இதுவரை நடந்த 13 ஆண்டுகளில் 2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி தான் முதல் போட்டி ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு போட்டியில் சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை, அதனால் பேட்டிங் பகுதியில் வீரர் இல்லாத காரணத்தால் பல போட்டிகளில் தோல்வியை சந்தித்தது சிஎஸ்கே. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கிருஷ்ணப்ப கவுதம், ராபின் உத்தப்பா, மெயின் அலி, ஹரி ஷங்கர் ரெட்டி போன்ற வீரர்கள் சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இதுவரை மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஆண்டு கோப்பையை வெல்லுமா?? என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துகே கொண்டு இருக்கின்றனர்.

இந்த ஆண்டு நிச்சியமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே – ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்று எதிர்பார்க்க படுகிறது. அதற்கு சில ஐபிஎல் வரலாற்று நிகழ்வுகள் இருக்கின்றனர். அது என்ன என்று பார்க்கலாம்..!!

கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக தென்னாபிரிக்காவில் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மோதினார்.

2014ஆம் ஆண்டு இந்தியாவில் தேர்தல் காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் போட்டி நடைபெற்றது. அதன்பிறகு 2015ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதினர்.

அதேபோல கடந்த ஆண்டு இந்தியாவில் கொரோனா தாக்கம் அதிகம் இருந்ததால் ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது ஐபிஎல் 2020. அதனால் நிச்சியமாக இந்த ஆண்டு ஐபிஎல் 2021யில் இறுதி போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி தேர்வாகுமா ??? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.