Video : என்ன ஒரு ஆனந்தம் பாருங்க ; குட்டி டிவில்லியர்ஸ் அடித்த சிக்ஸரை பார்த்த ரோஹித் சர்மா செய்த செயல்

நேற்று புனேவில் நடந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இதுவரை இந்த இரு அணிகளும் 27 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது.

அதில் பஞ்சாப் கிங்ஸ் அணி 13 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணி 14 போட்டிகளிலும் வென்றுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். வேறு வழியில்லாமல் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சிறப்பாக தொடக்க ஆட்டம் அமைந்தது.

அதனால் இறுதி ஓவர் வரை விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டை இழந்த நிலையில் 198 ரன்களை அடித்துள்ளது. அதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 52 மற்றும் தவான் 70 ரன்களை அடித்துள்ளனர். பின்பு 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி.

ஆனால் தோல்வி தான் மிஞ்சியது. தொடக்க வீரர்களான ரோஹித் மற்றும் இஷான் கிஷான் இருவரும் பெரிய அளவில் தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் மும்பை அணிக்கு ரன்களை அடிப்பதில் சந்தேமாகவே இருந்தது. ஆனால், ப்ரேவிஸ் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.

இருப்பினும் இறுதி ஓவர் வரை போராடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தோல்வி தான் மிஞ்சியது. பஞ்சாப் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வென்றுள்ளது. அதில் ப்ரேவிஸ் 49, சூர்யகுமார் யாதவ் 43 ரன்களை அடித்துள்ளனர்…!

இட்ர்ஹற்கிடையில் தான், ரோஹித் சர்மா செய்த செயல் வைரலானது. அப்படி என்ன செய்தார் ? ரோஹித் சர்மா ஆட்டம் இழந்த பிறகு ப்ரேவிஸ் களமிறங்கினார். அப்பொழுது சிறப்பாக விளையாடிய ப்ரேவிஸ், பஞ்சாப் கிங்ஸ் பவுலர் சஹார் ஓவரில் ரன்களை அடித்து தொம்சம் செய்தார்.

தொடர்ந்து 4 சிக்ஸரை அடித்துள்ளார் ப்ரேவிஸ். அப்பொழுது ரோஹித் சர்மா DUGOUT -ல் வெளியேறி மைதானத்திற்குள் வந்து ப்ரேவிஸிடம் பேசினார்கள். அப்பொழுது அவரை பாராட்டியுள்ளனர், வெற்றி தோல்வி என்பது அடுத்த விஷயம், ஒரு வீரரை சரியான நேரத்தில் பாராட்ட வேண்டும் என்பது தான் நோக்கமாக இருக்க வேண்டும்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்தில் 49 ரன்களை அடித்துள்ளார் ப்ரேவிஸ். இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய அனைத்து ஐந்து போட்டிகளிலும் தோல்வியை பெற்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியின் தோல்வி என்னவாக இருக்கும் ?