சென்னை அணியில் இணைந்த சிங்கக்குட்டி ; இனிமேல் தான் ஆட்டமே ! யார் தெரியுமா ?

ஐபிஎல் 2024:

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் 22 முதல் தொடங்கியுள்ளது. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும், சென்னை அணி இரண்டாவது இடத்திலும், பஞ்சாப் அணி மூன்றாவது இடத்திலும், குஜராத் அணி நான்காவது இடத்திலும் உள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி:

அனைவரும் எதிர்பார்த்த படி சென்னை அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் மகேந்திர சிங் தோனி. அதனை அடுத்து ரூட்டுராஜ் கெய்க்வாட் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார். பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சென்னை அணி வென்றுள்ளது.

அடுத்த போட்டி நாளை இரவு 7:30 மணியளவில் ருதுராஜ் தலைமையிலான சென்னை அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோத உள்ளனர். அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

சென்னை அணியில் இணைந்த இளம் வீரர் : ரசிகர்கள் வரவேற்பு

இலங்கை அணியை சேர்ந்த மதீஷ் பாதிரான கடந்த ஆண்டு சென்னை அணியின் முக்கியமான பவுலராக விளையாடி வந்துள்ளார். ப்ளேயிங் 11-ன் முக்கியமான வீரராக திகழ்ந்த பாதிரான இந்த ஆண்டு ஐபிஎல் 2024 தொடக்க போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது. இருப்பினும் நேற்று அவர் சென்னை அணியிடம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதீஷ் பாதிரான விளையாட அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

கடந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் 12 போட்டிகளில் விளையாடிய நிலையில் 19 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். பாத்திரனாவின் முக்கியத்துவம் நிச்சியமாக சென்னை அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குஜராத் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் யார் வெல்ல போகிறார்கள் ? உங்களுடைய கருத்தை பதிவு செய்யுங்கள்..!