வின் பண்ணா மட்டும் பத்தாது, இதையும் சரியா பண்ணனும்; இந்திய அணிக்கு அபராதம் விதித்த ஐசிசி!! எத்தனை புள்ளிகள் காலி தெரியுமா??

0

முதல் டெஸ்ட் போட்டியில் உரிய நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கவில்லை என்பதால் இந்திய அணிக்கு ஐசிசி அபராதம் விதித்து இருக்கிறது. மேலும் போட்டியிலிருந்து ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டிருக்கிறது.

செஞ்சூரியன் மைதானத்தில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், உரிய நேரத்திற்குள் ஓவர்களை முடிக்கவில்லை. மூன்றாம் நாள் ஆட்டத்தின்போது, இந்திய அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசாமல் கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டது. இதனால் கிட்டத்தட்ட 12 ஓவர்கள் வரை குறைவாக வீசப்பட்டு இருந்தது. அதன் பிறகு போதிய வெளிச்சம் இன்மை காரணமாக போட்டியும் முடிக்கப்பட்டது. 

நான்காவது நாளிலும் இதே போன்ற ஒரு நிலை தொடர்ந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்திய அணி பந்து வீசவில்லை. மூன்றாவது நாளின் இறுதியில் களத்திலிருந்த நடுவர் விராட் கோலியிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதற்காக எச்சரிக்கையும் விடுத்திருந்தார். ஆனால் நான்காவது நாளிலும் இந்த தாமதமான நிலை தொடர்ந்ததால், ஐசிசி இந்திய அணியின் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறது. 

விதிமுறைப்படி போட்டியிலிருந்த வீரர்களுக்கும், வீரர்களை சார்ந்த அணியின் பணியாளர்களுக்கும் போட்டியின் சம்பளத்திலிருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை விதிமுறைப்படி, ஒரு புள்ளியும் குறைக்கப்பட்டிருக்கிறது. ஐந்தாவது நாள் முடிவில் இந்திய அணி சராசரியாக ஒரு ஓவர் தாமதமாக  வீசி வந்தது. 

விதிமுறைப்படி போட்டி நேரத்திலிருந்து அபதாரமாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். உதாரணத்திற்கு இந்திய அணி, 2 ஓவர்கள் தாமதமாகவே வீசியிருந்தால் போட்டியின் சம்பளத்திலிருந்து 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும்.

இப்போது நடைபெற்று வரும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 64.28 ஆக இருந்தது. ஒரு புள்ளி குறைக்கப்பட்டதால், இந்திய அணியின் வெற்றி சதவீதம் 63.09ஆக குறைந்து உள்ளது.

இதற்கு முன்னதாக நடந்த ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி தாமதமாக பந்துவீசி வந்தது. மேலும், இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரின் போதும் இங்கிலாந்து அணி தாமதமாக பந்து வீசியது. இதன் காரணமாக, இதுவரை 10 புள்ளிகள் இங்கிலாந்து அணிக்கு குறைக்கப்பட்டிருக்கிறது. 

ஒரு அணி போட்டியில் வெற்றி பெற்றால், வெற்றிபெற்ற அணிக்கு 12 புள்ளிகள் கொடுக்கப்படும். அதில் 10 புள்ளிகளை இங்கிலாந்து அணி அபராதமாக இழந்ததால், பெருத்த பின்னடைவை சந்தித்து இருக்கிறது. இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் இதேபோன்று தாமதமாக பந்து வீசினால் இன்னும் அதிகமான புள்ளிகள் குறைக்கப்படும் என்றும் விதிமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here