இவர் இல்லாமல் மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்க போகும் இந்திய அணி ; போட்டியை வெல்லுமா ?

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி-20, ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 தொடரில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. அதனை தொடர்ந்து இப்பொழுது ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அதிலும் 1 -1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர். அதனால் யார் இன்று நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் வெல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது தான் உண்மை. இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டி லண்டனில் உள்ள மான்செஸ்டர் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர். டாஸ் வென்ற பிறகு பேசிய ரோஹித் சர்மா கூறுகையில் ; ” நாங்க முதலில் பவுலிங் செய்ய போகிறோம். எப்படி இருக்கிறது அதுதான் அடுத்த 1000 ஓவர் முழுவதும் இருக்கும்.”

“இன்றைய போட்டியில் யார் வெல்ல போகிறார்களோ அவர்கள் தான் தொடரை கைப்பற்ற முடியும். இந்த முறை இங்கிலாந்து அணிக்கு எதிரான சில போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளோம். அதிலும் இருந்து பல விஷயங்களை கற்றுக்கொண்டு முன்னேறிக்கொண்டு செல்கிறோம்.”

“அதனால் இன்றைய போட்டியில் நிச்சியமாக எதிர் அணியை முடிந்த வரை ரன்களை அடிக்கவிடலாம் தடுப்போம். இன்றைய போட்டியில் பும்ரா விளையாட முடியாது. அவருக்கு பதிலாக முகமத் சிராஜ் அணியில் இடம்பெற்றுள்ளார். பும்ராவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

பும்ரா இல்லாமல் இந்திய அணியால் சிறப்பாக பவுலிங் செய்ய முடியுமா ?

ஏனென்றால் முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டையும், இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பும்ரா தான் அதிகபட்சமாக 8 விக்கெட்டை கையாற்றியுள்ளார். இங்கிலாந்து அணியை ரன்களை அடிக்க விடாமல் தடுக்குமா ? இந்திய அணி ?

இந்திய அணியின் ப்ளேயிங் 11:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், விராட்கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், ஹர்டிக் பாண்டிய, ரவீந்திர ஜடேஜா, முகமத் ஷமி, யுஸ்வேந்திர சஹால் மற்றும் பிரஷித் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here