தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாட வேண்டுமென்றால் இதை சொன்னால் போதும் ; பட்டாசு பறக்கும் ; முன்னாள் பயிற்சியாளர் பேட்டி ;

0

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி-20, ஒருநாள் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த டி-20 போட்டியில் இந்தியா அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இப்பொழுது ஒருநாள் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

அதில் 1 – 1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது. அதனால் இன்று மதியம் 3:30 மணியளவில் தொடங்க உள்ள போட்டியில் யார் வெல்கிறார்களோ, அவர்கள் தான் தொடரை கைப்பற்ற போகின்றன. இன்றைய போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றுமா ?

இந்திய அணி:

இப்பொழுது நிறைய இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒருவர் தான் தினேஷ் கார்த்திக். கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சிறப்பாக விளையாடினார் தினேஷ் கார்த்திக். இவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற காரணத்தால் இந்திய அணியில் அதிக வாய்ப்பு கிடைக்காமல் போனது.

ஏனென்றால், அந்த நேரத்தில் தோனியும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். பின்னர் சில ஆண்டுகள் இவரது சர்வதேச பங்களிப்பு என்பது மிகவும் குறைந்தது. ஆனால் கடந்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியில் சிறப்பாக விளையாடினார் தினேஷ் கார்த்திக்.

அதனால் இந்திய அணியில் கம்பேக் கொடுத்தார். இப்பொழுது டி-20 போட்டிக்கான இந்திய அணியின் முக்கியமான வீரராக மாறியுள்ளார் தினேஷ் கார்த்திக். இதனை பற்றி பேசிய பெங்களூர் அணியின் பயிற்சியளர் ஷங்கர் கூறுகையில் ; “அவரிடம் பல திறமைகள் உள்ளன. அது நிச்சியமாக மூடநம்பிக்கையாக இருக்காது.”

” அவர் (தினேஷ் கார்த்திக்) எப்பொழுது நமபியாக மட்டுமே விளையாடி வருகிறார். அவரிடம் நீ சூப்பராக விளையாடுகிறாய் ..! அணியில் உன்னுடைய ஆட்டம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது என்று கூறினார், உடனடியாக அதனை நிறுத்திவிட்டு போய்விடுவார்.”

“இதே நீங்க சரியாகவே விளையாடுவது இல்லை, விரைவாக ஆட்டம் இழந்துவிடுவீர்கள் என்று தினேஷ் கார்த்திக்கிடம் சொன்ன உங்களை கட்டிப்பிடித்து நன்றி என்று கூறுவார் தினேஷ் கார்த்திக். எப்பொழுது எதிர்மாறாக தினேஷ் கார்த்திக்கிடம் சொன்னால் தான் ஏற்றுக்கொள்ளவார்.”

“எப்பொழுது பேட்டிங் செய்யும் முன்பு ஏதாவது ஒரு சகா வீரரை தேர்வு செய்து கொண்டு அவரிடம் ஏதாவது பேசி சந்தோசப்பட்டு கொண்டு இருப்பார் என்று கூறியுள்ளார் ஷங்கர்.”

இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் சிறப்பாக விளையாடினால் உலகக்கோப்பை 2022 போட்டியில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது. தினேஷ் கார்த்திக் இந்திய அணியின் சிறந்த பினிஷராக இடம்பெற வாய்ப்புகள் இருக்குமோ ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே COMMENTS பண்னுங்க..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here