இன்னொரு வீரருக்கும் காயமா ? இந்திய மற்றும் பாகிஸ்தான் போட்டியில் யார் தான் விளையாட போகிறார்கள் ?

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஆசிய கோப்பைக்கான டி-20 லீக் போட்டிகள் நாளை (ஆகஸ்ட் 27ஆம் ) முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 6 அணிகளை கொண்டு விளையாட உள்ளனர். அதில் இந்திய, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஹாங் காங் போன்ற நாடுகள் மோத உள்ளனர்.

இலங்கையில் நடைபெற வேண்டிருந்த போட்டி சில பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியுள்ளனர். குரூப் ஏ பிரிவில் இந்திய, பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் இடம்பெற்றுள்ளனர். அதேபோல குரூப் பி பிரிவில் இலங்கை , ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் இடம்பெற்றுள்ளனர்.

நாளை நடைபெற போகின்ற முதல் போட்டியில் தாசன் ஷனாக தலைமையிலான இலங்கை அணியும், முகமத் நபி தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணியும் மோத உள்ளனர். அதனை அடுத்து உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோத உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆசிய கோப்பையில் விளையாட போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டனர். அதில் இந்திய அணியில் பும்ராவிற்கும், பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் அப்ரிடி-க்கும் காயம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அதனை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் பாக்கிஸ்தான் அணியில் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஆமாம், இரு தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று பயிற்சி செய்து கொண்டு இருந்த நேரத்தில் பாகிஸ்தான் பவுலரான முகமத் வாசிம்-க்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்பொழுது தான் ஷாஹீன் அப்ரிடி-க்கு மாற்று வீரரை அறிவித்த நிலையில் மற்றொரு வீரருக்கு காயம் ஏற்பட்டது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் ஷாஹீன் அப்ரிடி சிறப்பாக பவுலிங் செய்து இந்திய அணியை வெற்றி பெற முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

அவர் இல்லாதது நிச்சியமாக பாகிஸ்தான் அணிக்கு பின்னடைவு தான், அவரை தொடர்ந்து வாசிம்-க்கு காயம் ஏற்பட்டதால் பாகிஸ்தான் அணிக்கு மோசமான சூழ்நிலை உருவாகியுள்ளது தான் உண்மை. பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி , இந்த முறையும் இந்திய அணியை வெல்லுமா ??