இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியை பார்க்க முடியாத !! சோகத்தில் ரசிகர்கள் ; முழு விவரம் இதோ…!

ஐபிஎல் 2021; வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி இந்த ஆண்டு ஐபிஎல் 2021 போட்டிகள் ஆரம்பிக்க போகிறது. அதனால் இந்தியா கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் மூழ்கியுள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் ஐபிஎல் நடத்த முடிவு செய்தது பிசிசிஐ.

அதுமட்டுமின்றி எந்த ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது பிசிசிஐ. அதன்படி எந்தவிதமான பிரச்சனை இல்லாமல் சிறப்பாக முடிந்தது ஐபிஎல் 2020. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐபிஎல் போட்டிகளில் ரசிகர்கள் 50% சதவீதம் பேர் மட்டும் அனுமதி என்ற செய்தியை வெளியிட்டது பிசிசிஐ.

அதன்பிறகு இந்தியாவில் கொரோனா தாக்கம் சற்று அதிகமாக இருப்பதால் ஐபிஎல் 2021யில் நாடாகும் முதல் சில போட்டிகளில் மக்கள் யாரும் அனுமதி இல்லை என்று ஐபிஎல் சார்பில் கூறியுள்ளனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Read More : வீடியோ ; சிஎஸ்கே அணியின் புதிய டி-ஷர்ட்டை அறிமுகப்படுத்திய தோனி …சந்தோஷத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான டி-20 போட்டிகளில் 50% சதவிதம் பேர் மைதானத்துக்கு சென்று பார்வையிட்டனர். ஆனால் இரண்டாவது போட்டியில் இருந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அனுமதி இல்லை என்றும் அவர்களுது டிக்கெட் பணத்தை ரிட்டன் செய்வதாக மைதானத்தின் உரிமையாளர் கூறியுள்ளார்.

இதற்கு முழு காரணம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க என்பது தான். அதனால் இப்பொழுது இருக்கும் நிலைமை பார்த்தால் நிச்சியமாக இந்த ஆண்டும் ஐபிஎல் போட்டியை ரசிகர்கள் யாரும் மைதானத்தில் பார்க்க முடியாது என்று தான் தெரிகிறது.

இதனால் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர் , கடந்த 2019 ஆம் ஆண்டு தான் கடைசியாக மக்கள் அனைவரும் மைதானத்துக்கு சென்று ஐபிஎல் போட்டியை பார்வையிட்டது. மீண்டும் எப்பொழுது நங்கள் மைதானத்தில் ஐபிஎல் போட்டியை பார்க்க முடியும் என்று ஆர்வத்தில் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.