தோனி இனி பினிஷர் கிடையாது ; இந்த இடத்தில் தான் தோனி பேட்டிங் செய்வார் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிக்கான தொடர் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது. அதனால் விறுவிறுப்பான தொடருக்கு பஞ்சம் இருக்காது.

தோனியின் இறுதி ஐபிஎல் போட்டி இதுவா ?

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளிலும், அதிக முறை ப்ளே – ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திகழ்கிறது. அதுமட்டுமின்றி சென்னை அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி அதிகபட்சமாக 15 ஆண்டுகள் விளையாடி உள்ளார்.

ஐபிஎல் அறிமுகம் ஆன 2008ஆம் ஆண்டில் இருந்து சுமார் 15 ஆண்டுகள் நிறைவு பெற்று 16வது ஆண்டில் விளையாட போகிறார் தோனி. ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா ?

தோனி 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகினார் தோனி. 41 வயதான தோனி எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஓய்வை அறிவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இரு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் அவரவர் ஹாம் மைதானத்தில் போட்டிகள் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்க ; சென்னை அணியின் மேட்ச் தேதி மற்றும் இடம் :

அதனால் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னையில் விளையாடும் இறுதி போட்டிக்கு பிறகு ஓய்வை அறிவிக்காமல் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சமீபத்தில் சென்னை அணியின் உறுப்பினர் அளித்த பேட்டியில் : “தோனி இன்னும் ஓய்வை பற்றி எந்தவிதமான தகவலையும் வெளியிடவில்லை. அவர் பிட் ஆக இருந்தால் அடுத்த ஆண்டும் விளையாடுவார் என்று கூறியுள்ளனர்.”

தோனி எந்த ஆர்டரில் பேட்டிங் செய்ய போகிறார் :

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் ப்ளேயிங் 11 வலுவாக இருக்கிறது. அதனால் தோனி டாப் ஆர்டர் (4வதாக) பேட்டிங் செய்ய அதிக வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால், இறுதியாக (பினிஷர்) ரவீந்திர ஜடேஜா, பென் ஸ்டோக்ஸ், ஷிவம் துபே, மிச்சேல் சண்ட்னர், தீபக் சஹார் போன்ற வீரர்கள் இருக்கின்றனர்.

41 வயதான தோனி இன்னும் புயல் வேகத்தில் விளையாடி கொண்டு வரும் நிலையில் அவரை டாப் ஆர்டரில் விளையாட வைத்தால் அது சரியாக இருக்குமா ? சென்னை அணியின் பினிஷராக தோனி இருக்க வேண்டுமா ? இல்லையா ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here