சென்னை ரசிகர்களே இந்த தேதி ஆ ..! மறக்காம Note பண்ணி வெச்சுக்கோங்க ; மிஸ் பண்ணிடாதீங்க ;

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் ஐபிஎல் 2023 போட்டிகள் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று ஆரம்பிக்க இருக்கிறது. அதுவும் முதல் போட்டியில் ஹர்டிக் பாண்டிய தலைமையிலான குஜராத் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணியும் மோத உள்ளனர்.

ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணியாக திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. சுமார் 15 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் ஒரே வீரர் மகேந்திர சிங் தோனி மட்டும் தான். அதுவும் சென்னை அணியின் கேப்டனாகவே விளையாடி வருகிறார்.

இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 முறை கோப்பையை வென்றுள்ளனர். அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான நிலையில் வெளியேறியது சென்னை.

இந்த ஆண்டு சென்னை அணிக்கு முக்கியமான ஐபிஎல் தொடரா ?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சிறப்பாக வடிவமைத்த வீரராக திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி. கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் தோனி. அதனை அடுத்து வெறும் ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாடி வருகிறார்.

41 வயதான தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் தொடரிலும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் இந்த ஆண்டு சென்னை அணி எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டுமென்று கடந்த 3ஆம் தேதி அன்றே பயிற்சியை தொடங்கியுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டி விவரம் மற்றும் தேதிகள் கீழே :

மார்ச் 31: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (அகமதாபாத்)

ஏப்ரல் 3 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் (சென்னை)

ஏப்ரல் 8 : மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (மும்பை)

ஏப்ரல் 12 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் (சென்னை)

ஏப்ரல் 17: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (பெங்களூர்)

ஏப்ரல் 21: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதெராபாத் (சென்னை)

ஏப்ரல் 23: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (கொல்கத்தா)

ஏப்ரல் 27: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (ஜெய்ப்பூர்)

ஏப்ரல் 30 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் (சென்னை)

மே 4 : லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (லக்னோ)

மே 6: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் (சென்னை)

மே 10: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேபிட்டல்ஸ் (சென்னை)

மே 14 : சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (சென்னை)

மே 20: டெல்லி கேபிட்டல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் (டெல்லி)