ஐபிஎல் : உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர் திகழ்கிறது. ஆமாம், கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது ஐபிஎல் தொடர்.

இது குறுகிய போட்டி என்றதால் கிரிக்கெட் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிக்கான தொடர்.
ஐபிஎல் 2023: இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சியமாக பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த போகிறது என்பது தான் உண்மை. இரு ஆண்டுகளுக்கு பிறகு அவரவர் ஹாம் மைதானத்தில் நடக்க போகிறது ஐபிஎல் 2023. அதனால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று முதல் போட்டி தொடங்க இருக்கிறது.
சென்னை அணிக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகவும் முக்கியமான தொடர் :

ஐபிஎல் போட்டிகள் அறிமுகம் ஆன காலத்தில் இருந்து மகேந்திர சிங் தோனி தான் சென்னை அணியின் கேப்டனாக சிறப்பாக வழிநடத்தி வருகிறார். இதுவரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மொத்தம் 4 முறை சாம்பியன் படத்தை வென்றுள்ளனர்.
அதுமட்டுமின்றி, 41வயதான தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டிகளிலும் இருந்தும் ஓய்வை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருந்தாலும் கடந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் தீபக் சஹாரை அதிக விலை கொடுத்து வாங்கியது சென்னை அணி.

ஆனால் காயம் காரணமாக ஐபிஎல் 2022 போட்டிக்கான தொடரில் முழுவதிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் அவர் முழுமையாக விளையாட தயாராக இருப்பதாக கூறியுள்ளார் தீபக் சஹார்.
மேலும் பேசிய தீபக் சஹார் கூறுகையில் : “நான் இந்திய அணியில் விளையாட போதிலும் ஒரே ஸ்டெப்ஸ் -ஐ தான் பின்பற்றினேன். நான் ஸ்டேட் டீமில் விளையாடி கொண்டு இருந்த போது பல கஷ்டங்களை எதிர்கொண்டேன். அதனை பார்த்து பலர் சிரித்ததும் உண்டு.”
“நான் மட்டும் 140 கிமீ வேகத்தில் பவுலிங் செய்து இரு பக்கமும் ஸ்விங் செய்தால் நிச்சியமாக நான் இந்திய அணியில் தேர்வாகிவிடுவேன். அதுமட்டுமின்றி பேட்டிங் செய்து சில ரன்களை அடித்தால் போதும். இதனை நான் இப்பொழுது ஐபிஎல் தொடரில் செய்ய ஆசைப்படுகிறேன்.”

“இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாகுவது மிகவும் கடினமான விஷயம் தான். ஆனால் நான் பேட்டிங் செய்வது எனக்கு பிளஸ் தான். இறுதி ஆண்டு எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது, அதனால் சிறப்பாக பேட்டிங் செய்தேன். உதாணரத்திற்கு ஹர்டிக் பாண்டிய அணியில் இருக்கிறார்.”
“அவரால் பாட்டிங், வேகமான பவுலிங் மற்றும் ஸ்விங் செய்ய முடியும். அதனால் தான் அவரை இந்திய அணியில் இருந்து வெளியேற்ற முடியாது. அதுமட்டுமின்றி உலகின் நம்பர் 1 ஆல் – ரவுண்டராக திகழ்கிறார் ஹர்டிக் என்று கூறியுள்ளார் தீபக் சஹார்.”
0 Comments