மறுபடியும் கிரிக்கெட் உலகில் வர போகிறார் டிவில்லியர்ஸ் ; ஆனால் ப்லேயர் இல்லையாம் ; இதை தான் செய்ய ஆசைப்படுகிறேன் ; டிவில்லியர்ஸ் ஓபன் டாக்

0

கிரிக்கெட் போட்டியில் அதிக ரசிகர்களை மட்டுமே கொண்ட ஒருவர் தான் டிவில்லியர்ஸ். இவரை எனக்கு பிடிக்காது என்று ஒரு ரசிகர் கூட சொல்லமாட்டார். அதற்கு முக்கியமாந காரணம் இவருடைய அதிரடியான ஆட்டம் தான். தென்னாபிரிக்கா அணியை சேர்ந்த டிவில்லியர்ஸ், கடந்த 2018ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

பின்னர், ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தொடர்ந்து விளையாடி கொண்டே வந்து கொண்டு இருந்தார். கடந்த ஆண்டு 2021 ஐபிஎல் போட்டிக்கு பிறகு ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார் டிவில்லியர்ஸ்.

இதுவரை டிவில்லியர்ஸ் 114 டெஸ்ட் போட்டியிலும், 228 ஒருநாள் போட்டியிலும், 78 டி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளை பற்றி பேசிய டிவில்லியர்ஸ் ; தென்னாபிரிக்கா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் (ஆலோசகராக அல்லது பயிற்சியாளராக) பணிபுரிய அதிக வாய்ப்பு உள்ளது.

ஆனால் நான் இன்னும் அதனை பற்றி யோசிக்கவே இல்லை, கூறிய விரைவில் இதற்கான பதில் கிடைக்கும். எனக்கு இளம் வீரர்களுக்கு ஆலோசகராக இருக்க ஆசைப்படுகிறேன், அது என்னால் முடியும். நான் கிரிக்கெட் விளையாடிய போது என்னுடைய அனைத்து உழைப்பை வைத்து விளையாடியதே இல்லை.

ஆனால் நான் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய ஒவ்வொரு நிமிடமும் சந்தோசமாக தான் விளையாடியுள்ளேன். அதில் எப்போது குறைய ஆரம்பித்ததோ, நான் அதில் இருந்து முன்னேற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன் என்று கூறியுள்ளார் மிஸ்டர்.360 (டிவில்லியர்ஸ்).

ஐபிஎல் போட்டியில் 2011 ஆண்டு முதல் 2021 வரை, சுமார் 10 ஆண்டுகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தான் விளையாடி வருகிறார். அதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் ஆலோசகராகவோ, பயிற்சியாளராகவோ டிவில்லியர்ஸ் பணிபுரிய அதிக வாய்ப்பு உள்ளது.

அதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஐபிஎல் டி-20 2022 போட்டியில் லக்னோ மற்றும் அஹமதாபாத் போன்ற இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. வருகின்ற பிப்ரவரி மாதத்தில் தொடங்க உள்ள ஐபிஎல் 2022 போட்டிக்கான ஏலத்தை எதிர்பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

டிவில்லியர்ஸ் பயிற்சியாளராக ஐபிஎல் அணியில் இடம்பெற்றால் எப்படி இருக்கும் ??? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க..! கிரிக்கெட் ரசிகர்களே..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here