மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரிய ஆப்பு ; ஐபிஎல் தொடரில் இவர் இல்லையாம் ; ரசிகர்கள் அதிர்ச்சி ;

0

ஐபிஎல் : கடந்த 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனது தான் ஐபிஎல் டி-20 லீக் போட்டிக்கான தொடர். இது குறுகிய போட்டி என்றதால் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளனர்.

அதனால் ஆண்டுதோறும் தவறாமல் சிறப்பாக நடைபெற்று வருகிறது ஐபிஎல் போட்டிகள். இதுவரை 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்த 16வது சீசன் வருகின்ற மார்ச் 31ஆம் தேதி அன்று தொடங்க இருக்கிறது.

அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான ஆலோசனையில் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி எழுந்து வருகிறது.

ஆமாம், கடந்த ஆண்டு 2022 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பங்களிப்பு மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை. அதற்கு முக்கியமான புதிய அணி என்பதாலும், அர்ச்சர் போன்ற முன்னணி பவுலர் அணியில் இல்லாததும் தான்.

சரி இந்த ஆண்டு ஐபிஎல் 2023 போட்டியில் பும்ரா மற்றும் அர்ச்சர் ஆகிய இருவரின் பங்களிப்பும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

ஏனென்றால், கடந்த சில போட்டிகளில் பும்ராவின் பங்களிப்பு இந்திய அணியில் இல்லை. அதற்கு முக்கியமான காரணம் பும்ராவிற்கு ஏற்பட்ட காயம் தான். அதில் இருந்து மீண்டு வருகின்ற ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடரில் விளையாடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ஆனால் ஏமாற்றம் தான். ஏனென்றால் இந்த ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை மனதில் வைத்து கொண்டு வருகின்ற ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான தொடரில் விளையாட போவதில்லை என்பது போல தகவல் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை ஐந்து முறை சாம்பியன்ஷிப் படத்தை வென்றுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here