எங்களுக்கு இந்த விஷயத்தில் அதிக நம்பிக்கை உள்ளது ; அதுவும் பவுலர்கள் இதை செய்வார்கள் ; புஜரா ஓபன் டாக் ;

0

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸ்-ல் பேட்டிங் செய்த இந்திய அணி 202 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தனர்.

பின்னர் தென்னாபிரிக்கா அணி முதல் இன்னிங்ஸ் பேட்டிங் செய்து 229 ரன்களை அடித்து, இந்திய அணியை விட 27 ரன்கள் முன்னிலையில் இருந்தன. இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங் செய்த இந்திய அணி 266 ரன்கள் அடித்த நிலையில் அனைவரும் ஆட்டம் இழந்தனர். தென்னாபிரிக்கா அணி 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலகுடன் களமிறங்கியது.

அதில் 118 ரன்கள் அடித்த நிலையில் 3வது நாள் நிறைவு பெற்றது. பின்னர் இன்று மழை தொடர்ந்து பெய்த காரணத்தால் 1:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, இரவு 7:15 க்கு தொடங்கியுள்ளது. தென்னாபிரிக்கா அணி இன்னும் 100 ரன்களை அடித்தால் வெற்றி பெறும் அல்லது மீதமுள்ள 8 விக்கெட் இந்திய அணி கைப்பற்ற வேண்டும் அப்பொழுது தான் இந்தியா கிரிக்கெட் அணி வெற்றி பெறும்.

இதற்கிடையில் இந்திய அணியின் பேட்ஸ்மேனான புஜரா பேட்டி கொடுத்துள்ளார். அதில் இந்த போட்டியும் கடந்த போட்டியும் ஒரே மாதிரி தான் இருக்கிறது. சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் பெற்ற வெற்றிகள் சாதாரணம் இல்லை. நாங்கள் எப்பையுமே எங்களது சுய நம்பிக்கையுடன் தான் விளையாடுவோம். அதுமட்டுமின்றி எங்களது (இந்திய) பவுலர்கள் நிச்சியமாக 20 விக்கெட்டை கைப்பற்றும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள் தான்.

சரியாக இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் தொடங்கும் போது தான் விராட்கோலி முதுகு தசை பிடித்துக்கொண்டது. அதனால் அவரால் விளையாட முடியாமல் போனது. இந்த போட்டியை தவற விட அவருக்கும் கஷ்டமாக தான் இருக்கும். குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ப்ளேயிங் 11க்கு வெளியே இருக்கும் வீரர்களுக்கும் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

அவரால் அனைவரும் எங்களுக்கு உதவியாக இருந்து வருகின்றன. அதுமட்டுமின்றி சரியான நேரத்தில் வாய்ப்புகள் வரும்போது அதனை சரியாக பயன்படுத்தி விளையாடி வருகின்றார்கள் என்று கூறியுள்ளார் புஜரா. எப்படியும் தென்னாபிரிக்கா அணிக்கு தான் வெற்றிக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஏனென்றால் இன்று மட்டுமின்றி நாளையும் ஒருநாள் மீதமுள்ளன.

அதனால் இன்று அடிக்க முடியாத ரன்களை நாளை கூட அடித்துவிடும். அதனை இந்திய அணிக்கு வெற்றிக்கான வாய்ப்பு மிகவும் குறைவுதான் என்பதில் சந்தேகமில்லை. தென்னாபிரிக்கா அணி வெற்றி பெற்றால் 1 -1 என்ற நிலை ஏற்படும். பின்னர், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் எப்படியாவது இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற ஆக வேண்டும், தொடரை கைப்பற்ற….!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here