இவர் என்ன இப்படி மோசமாக விளையாடி கொண்டு இருக்கிறார் ? இவரை பயிற்சியாளர் டிராவிட் ஆதரிக்கிறாரா ; இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவேசம் ;

0

சமீப காலமாக இவருடைய ஆட்டம் சரியாக இல்லை, புஜரா மற்றும் ரஹானேவை விட்டு இவரை பாருங்கள். எப்படி மோசமாக விளையாடி வருகிறார் என்று. முதலில் இவரை வெளியேற்றுங்கள் என்று கிரிக்கெட் ரசிகர்களுடைய கருத்தை பற்றி பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர்.

இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகின்றனர். அதில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது நாள் போட்டி மழை காரணமாக தாமதம் ஆகிக்கொண்டே இருக்கின்றனர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டை கைப்பற்ற வேண்டும். ஒருவேளை 122 ரன்களை சவுத் ஆப்பிரிக்கா அணி அடித்துவிட்டால் வெற்றியை பெற்றுவிடும்.

முதல் டெஸ்ட் போட்டியில் 133 ரன்கள் வித்தியாசத்தில் சவுத் ஆப்பிரிக்கா அணியை வென்றுள்ளது இந்திய. இப்பொழுது 1 – 0 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி யாருக்கு சாதகமாக அமைய போகிறது ? என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கிடையில், தான் இந்திய அணியின் விக்கெட்டை கிப்பரான ரிஷாப் பண்ட்-ஐ வெளுத்து வாங்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவாஸ்கர். சமுகவலைத்தளங்களில் புஜரா மற்றும் ரஹானேவை மட்டும் ஏன் குறிவைத்து பேசிக்கொண்டு இருக்கிறார்கள் ? ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு ரிஷாப் பண்ட் சொல்லும் அளவுக்கு விளையாடுவது இல்லை என்று கேள்விகள் எழுகின்றன.

அதனை பற்றி பேசிய கவாஸ்கர்; ஆமாம் அது சரியான கேள்வி தான். அதுமட்டுமின்றி சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ்-ல் டக் அவுட் ஆகியுள்ளார் ரிஷாப் பண்ட். அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய கடினமான போராடினார். பின்னர் பேட்டிங் செய்து கொண்டே இருந்ததால் பிக் ஷாட்ஸ் அடித்தார். இதுதான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் ரிஷாப் பண்ட் செய்தார்.

அதன்பின்னர் இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஜேம்சன் வீசிய பந்தை பிட்ச் இறங்கி விளையாடினார், அதனால் சிறப்பாக விளையாடினார் ரிஷாப் பண்ட். ஆனால் இப்பொழுது அப்படி விளையாடுவதில்லை. ஒருவேளை ராகுல் டிராவிட் வேறு ஏதாவது திட்டம் வைத்திருக்கிறாரோ என்று தெரியவில்லை – கவாஸ்கர் கூறியுள்ளார்.

ரிஷாப் பண்ட் முதல் டெஸ்ட் போட்டியில் 42 ரன்களையும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 17 ரன்களை மட்டுமே அடித்துள்ளார். இவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் இடம்பெற்றால் சிறப்பாக இருக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் COMMENTS பண்ணுங்க…!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here