ஐபிஎல் 2021 : கேப்டன் பதவி போயிருமா ? பதட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் ; முழு விவரம்

ஐபிஎல் 2021: வருகின்ற 8ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் சந்தோசத்தில் மூழ்கியுள்ளனர். ஏனென்றால் ஐபிஎல் என்றாலே அது இந்தியா கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது ஒரு திருவிழா போல. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு நாட்டில் நடந்தது.

ஒரு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடக்க இருப்பதால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்தில் உள்ளனர். அதேபோல சில அணிகள் அவரவர் ஹாம் மைதானத்தில் பயிற்சியை ஆரம்பித்துள்ளார். இன்னும் ஐபிஎல் 2021 போட்டிக்கு சில நாட்களே உள்ளதானால். இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் பல வீரர்கள் அணிகள் மாறியுள்ளன.

ஐபிஎல் போட்டியில் கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வழிநடத்தியது இந்தியா அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் இந்த ஆண்டு டெல்லி அணியில் அஸ்வின் , ஸ்டீவ் ஸ்மித் மற்றும் ரஹானே இடம் பெற்றதால் கேப்டன் யார் என்ற கேள்வி எழுகிறது.

Read More : இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டி-20 போட்டியில் வெல்லுமா இந்தியா ? இந்தியா அணியில் ஏதாவது மாற்றும் இருக்குமா ; முழு விவரம்

ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயரை விட மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் அஸ்வின், ரஹானே ,மற்றும் ஸ்டீவ் ஸ்மித். அதுமட்டுமின்றி ஸ்டீவ் ஸ்மித் ,ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வழிநடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் டெல்லி அணியின் உரிமையாளர் : டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான்.

ஏனென்றால் கடந்த இரு ஆண்டுகளில் டெல்லி அணி சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு 2020 ஐபிஎல் போட்டியில் இறுதி போட்டி வரை வந்துள்ளது. இவை அனைத்தும் ஸ்ரேயாஸ் ஐயர் தான் காரணம். அதனால் ஸ்டீவ் ஸ்மித் , அஸ்வின் ஆகிய அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஐயருக்கு நல்ல இரு வழிகாட்டியாக இருக்கலாம் என்று டெல்லி அணியின் உரிமையாளர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் புதிய ஆடையை அறிமுகப்படுத்தியது டெல்லி அணியின் உரிமையாளர்.ஐபிஎல் 2021 ஆண்டு முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ள போகிறது , ஏப்ரல் 9ஆம் தேதி.