ஒயிட்வாஷ் பண்ணிட்டோம்னு ரொம்ப சந்தோஷப் படாதீங்க.. இந்திய அணியில் இவ்ளோ பெரிய பிரச்சினை இருக்கு; உண்மையை போட்டுடைத்த முன்னாள் வீரர்!!!

0

டி20 தொடரைக் கைப்பற்றிவிட்டால் போதுமா? இவ்வளவு பெரிய பிரச்சனையை சரி செய்ய வேண்டாமா? என இந்திய அணியின் உண்மையான பிரச்சனையை எடுத்துரைத்துள்ளார் இர்பான் பதான்.

நியூசிலாந்து அணியுடன் விளையாடிய 3 டி20 போட்டிகளையும் இந்திய அணி கைப்பற்றி, ஒயிட் வாஷ் செய்தது. இதன் பிறகு வருகிற டிசம்பர் 25ஆம் தேதி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் துவங்க உள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியை மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் இந்திய வீரர்கள் சற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நல்ல மனநிலையுடன் அடுத்த போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வீரர்கள் மட்டுமல்லாது ரசிகர்களும் இந்த வெற்றியை கொண்டாட்டம் கோணத்தில் பார்க்கின்றனர்.

இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க இந்திய அணியில் இவ்வளவு பெரிய பிரச்சினையை வைத்துக் கொண்டு அதனை சரி செய்ய முயற்சிக்காமல், இப்படி கொண்டாட்டத்தில் இருப்பது சரியா? என கேள்விகளை எழுப்பியதோடு, உண்மையான பிரச்சனையை சுட்டிக்காட்டியுள்ளார் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான்.

“ரிஷப் பண்ட் பேட்டிங்கில் எவ்வித பயமுமின்றி விளையாடி வந்தாலும், அவர் சில நேரங்களில் தவறான ஷாட் அடித்து ஆட்டம் இழப்பது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைகிறது. அதேபோல் சுழல் பந்துவீச்சாளர்களை கண்மூடித்தனமாக விளையாடுகிறார். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகவே இவருக்கு இந்த பிரச்சினை இருப்பதை அனைவரும் அறிவர். ஆனால் அதனை அவர் சரி செய்ய முயற்சி செய்கிறாரா? என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதே தவறை செய்து வருகிறார். 

அடுத்ததாக, உள்ளூர் போட்டிகளில் மிகுந்த அனுபவம் மிக்க சூர்யகுமார் யாதவ் இந்திய மண்ணிலும் சரியாக விளையாட தவறுகிறார். முதல் போட்டியில் அவரது கேட்சை சரியாக பிடித்திருந்தால், இந்திய அணி தோல்வியை தழுவி இருக்கும். நல்ல அனுபவம் மிக்க இவர் சற்று அவசரமாக விளையாடுகிறார் என்று தோன்றுகிறது.

மூன்றாவது போட்டியிலும் சுழல் பந்துவீச்சாளர்களை ஆடிய விதம் அனுபவமின்மையை காட்டுகிறது. இந்திய அணிக்கு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்னும் கவனக் குறைவாகவே இருக்கின்றனர். இத்தகைய பெரிய பிரச்சனையை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். வெற்றியை கொண்டாடுவதில் தவறல்ல; ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் அதே போன்ற தவறை செய்து வருவதே கவனக்குறைவாக தெரிகிறது. ஆகையால் விரைவில் இதைச் சரிசெய்து டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாட எனது வாழ்த்துக்கள்.” என்று பேட்டியளித்தார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here