IND vs ENG 2021: நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் பவுலிங்கை தேர்வு செய்தனர். முதலில் களமிறங்கிய இந்திய அணியின் வீரர்கள் நிர்ணயக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 336 ரன்கள் எடுத்தனர்.


பின்பு 337 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 337 ரன்களை எடுத்து இந்திய அணியை வீழ்த்தியது. அதனால் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். அதனால் நாளை நடைபெறும் போட்டியே கோப்பை யாரு என்று தீர்மானிக்கும்.
இந்திய அணி தோல்விக்கு என்ன காரணம் ? என்று பல கேள்விகள் எழுப்பட்டன. ஏனென்றால் முதல் ஒரு போட்டியில் இங்கிலாந்து அணியின் 10 விக்கெட்டையும் கைப்பற்றியது. ஆனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணியின் விக்கெட்டை சரியான சமையத்தில் எடுக்க முடியவில்லை.
பரிஸ்டோவ் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது இந்திய கிரிக்கெட் அணி. ஏன் ஹார்டிக் பாண்டியாவுக்கு பவுலிங் தரவில்லை?? ; காரணம் கூறிய விராட் கோலி…!
Also Read : ஹார்டிக் பாண்டியாவுக்கும் சாம் காரனுக்கும் என்ன சண்டை… ? முழு விவரம்…! இதோ..!
ஏன் ஹர்டிக் பாண்டியாவுக்கு பவுலிங் தரவில்லை என்று கோலியிடம் கேள்வி எழுப்பின்னர். அதற்கு பதிலளித்த விராட் கோலி , ஹார்டிக் பாண்டிய மிகவும் சிறந்த வீரர் (பேட்டிங் மற்றும் பவுலிங் ). அவரது உடல்நிலையை நங்கள் நான்கு புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்து நாட்டில் நடக்கபோகின்ற டெஸ்ட் போட்டிகளில் அவரது ஆட்டம் எங்களுக்கு மிகவும் முக்கியம் என்று கூறியுள்ளார் கோலி.


2019ஆம் ஆண்டு அவருக்கு ஆப்ரேஷன் நடந்தது. அதனால் அவர் ஐபிஎல் 2020 ஆம் பவுலிங் செய்யவில்லை. அதற்கு இதுதான் காரணம். அதனால் அவருக்கு பவுலிங் தரவில்லை என்று கூறியுள்ளார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி.இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 16 பந்தில் 35 ரன்களை எடுத்து 218.75 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் ஹார்டிக் பாண்டிய.
நாளை போட்டியில் ஏதாவது அணியில் மாற்றம் இருக்குமா ?? கோப்பையை கைப்பற்றும் இந்திய அணி என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும். நாளை போட்டி புனே மைதானத்தில் மதியம் 1:30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.