ஒருவழியாக பாகிஸ்தான் அணியை இறுதி ஓவர் வரை போராடிய விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவால் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய கிரிக்கெட் அணி.

மற்ற போட்டிகளை காட்டிலும் இன்றைய போட்டிக்கு தான் உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்தனர். ஆமாம், இன்று மதியம் தொடங்கிய போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இந்த போட்டி ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் செய்ய முடிவு செய்தார். அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சரியான தொடக்க ஆட்டம் அமையவில்லை. தொடர்ந்து விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் அணியால் ரன்களை அடிக்க முடியாமல் தவித்தனர். 10 ஓவருக்கு பிறகு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அதிரடியாக ரன்களை அடித்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 159 ரன்களை அடித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. அதில் அதிகபட்சமாக மசூத் 52, அகமத் 51, ஷாஹீன் அப்ரிடி 16 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு 160 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய. பாகிஸ்தான் அணியை போலவே தொடக்க ஆட்டம் சரியாக அமையவில்லை. அதுமட்டுமின்றி நம்பிக்கை நாயகனாக திகழும் சூர்யகுமார் யாதவும் விக்கெட் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு தோல்வி தான் என்று பலர் நினைத்துகொண்டு வந்தனர். ஆனால் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டிய ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து 100க்கு மேற்பட்ட ரன்களை அடித்துள்ளனர்.
அதனால் இறுதி ஓவர் வரை சிறப்பாக விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 160 ரன்களை அடித்தது இந்திய. அதனால் 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய கிரிக்கெட் அணி. அதில் கே.எல்.ராகுல் 4, ரோஹித் சர்மா 4, விராட்கோலி 82, சூர்யகுமார் யாதவ் 15, ஹர்டிக் பாண்டிய 40 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். குரூப் 2வில் 2 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது இந்திய.

போட்டி முடிந்த பிறகு பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் தோல்வியை பற்றி பேசியுள்ளார். அதில் “எங்கள் அணியின் (பாகிஸ்தான்) பவுலர்கள் சிறப்பாக தான் பவுலிங் செய்தனர். இருந்தாலும் அனைத்து புகழும் விராட்கோலி மற்றும் ஹர்டிக் பாண்டியாவுக்கு தான் சேரும்.”
“நாங்கள் பேட்டிங் செய்த போது முதல் 10 ஓவர்கள் சரியான பார்ட்னெர்ஷிப் அமையவில்லை. ஆனால் நாங்க என்ன பிளான் செய்தோமோ அதில் தான் கவனமாக இருந்தோம். இருப்பினும் அதிரடியாக விராட்கோலி விளையாடியது எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. இந்திய வீரர்கள் விளையாடி கொண்டு இருந்த போது மிடில் ஓவரில் விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்று முடிவு செய்தோம். அதற்கு தான் சுழல் பந்து வீச்சாளர்களை பவுலிங் செய்ய வைத்தோம். இருந்தாலும் இது ஒரு பாடமாக இருக்கும். அனைத்தையும் பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எங்கள் அணியில் அகமத் மற்றும் ஷான் மசூத் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியது பாகிஸ்தான் அணிக்கு நல்ல விஷயம் தான் என்று கூறியுள்ளார் பாபர் அசாம்.”
0 Comments