இந்திய அணிக்கு இதை செய்ய ஆசைப்பட்டேன் ; அதனை செய்துவிட்டேன் ; பரிஸ்டோவ் பேட்டி ;

0

இங்கிலாந்து மற்றும் இந்திய ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூலை 1ஆம் தேதி அன்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கியது இந்திய.

முதல் இன்னிங்ஸ் தொடக்கத்தில் தொடர்ந்து ஐந்து விக்கெட்டை இழந்து வந்த நிலையில் வெறும் 100 ரன்களை மட்டுமே அடித்தனர். ஆனால் அந்த நேரத்தில் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரிஷாப் பண்ட் ஆகிய இருவரின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணிக்கு ரன்கள் குவிந்தன.

ஆமாம், அதனால் முதல் இன்னிங்ஸ் முடிவில் 84.5 ஓவர் விளையாடிய இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டை இழந்த நிலையில் 416 ரன்களை அடித்தனர். ஆமாம், அதில் சுமன் கில் 17, புஜாரா 13, ஹனுமா விஹாரி 20, பண்ட் 146, ஜடேஜா 104, பும்ரா 30 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்-ல் விளையாடி வருகிறது. ஆமாம், இதுவரை 27 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்த நிலையில் 84 ரன்களை அடித்துள்ளனர். இதற்கிடையில், பல நேரங்களில் மழை வந்த காரணத்தால் போட்டி சரியாக நடைபெறாமல் போனது…!

பின்பு இங்கிலாந்து அணிக்கு முதல் இன்னிங்ஸ் முடிவில் 284 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 138 ரன்கள் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்ஸ்-ல் இந்திய அணி எதிர்பார்த்த அளவிற்கு விளையாடவில்லை என்பது தான் உண்மை.

வழக்கம் போல தொடக்க வீரரான சுமன் கில் 4 ரன்களில் ஆட்டம் இழந்தார். இருப்பினும் மீதமுள்ள வீரர்கள் முடிந்த வரை விளையாடிய 245 ரன்களை மட்டுமே அடித்தனர். பின்பு 380 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.

தொடக்கத்தில் மூன்று விக்கெட்டை விரைவாக இந்திய அணி கைப்பற்றியது. அதனால் இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் ஜோ ரூட் மற்றும் பரிஸ்டோவ் ஆகிய இருவரும் பார்ட்னெர்ஷிப் செய்து இருவரும் சதம் அடித்து இங்கிலாந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

போட்டியை பற்றி பேசிய இங்கிலாந்து அணியின் வீரர் பரிஸ்டோவ் அளித்த பேட்டியில் ; ” இந்த போட்டி நிச்சியமாக சந்தோசமாக இருந்தது. கடந்த மாதம் விளையாடிய போட்டியில் அனைத்து வீரர்களுக்கும் நம்பிக்கை இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக எனக்கு கிரிக்கெட் போட்டியில் விளையாட கடினமாக இருந்தது.”

“ஆனால் கடந்த சில மாதங்களாக நான் சிறப்பாக விளையாடி வருகிறேன். நான் நிச்சயமாக பயப்படவில்லை, எதிர் அணியின் (இந்திய)-க்கு அழுத்தத்தை கொடுக்க நினைத்தேன். முதல் விளையாடியது போல விளையாடிருந்தால் நிச்சியமாக தோல்வி தான் கிடைத்திருக்கும்.”

“ஆனால் நாங்க பாசிட்டிவ் ஆக தான் விளையாடினோம். இந்திய அணியில் பல உலக கிரிக்கெட் போட்டியில் சிறப்பான வீரர்கள் உள்ளனர். அவர்கள் முடிந்த வரை எங்களுக்கு அழுத்தத்தை கொடுத்தனர். அவர்களும் சிறந்த முறையில் கிரிக்கெட் போட்டியில் விளையாடி உள்ளனர்.”

“நானும் (பரிஸ்டோவ்) மற்றும் ஜோ ரூட் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினோம். அதுமட்டுமின்றி, நாங்க இருவரும் பல போட்டிகளில் ஒன்றாக விளையாடியது உண்டு. அவருடன் விளையாடுவது எப்பொழுதும் சிறந்த விஷயம் தான் என்று கூறியுள்ளார் பரிஸ்டோவ்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here