இவரது பீல்டிங் சிறுத்தை போல இருக்கிறது ; இந்திய அணியின் அரசன் மீண்டும் வந்துவிட்டான் ; முன்னாள் பயிற்சியாளர் ஸ்ரீதர் பேட்டி ;

0

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டு இருந்த இந்திய மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று டி-20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் இன்று முதல் தொடங்க உள்ளது. இதனை அடுத்து உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளதால், இது ஒத்திகை போட்டியாக இருக்கும்.

கம்பேக் கொடுத்த இந்திய அணியின் அரசன் :

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி பல சாதனைகளை செய்தது மட்டுமின்றி இந்திய அணிக்கு பெருமையும் சேர்த்துள்ளார் விராட்கோலி. கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் தான் விராட்கோலி இறுதியாக சதம் அடித்தார். அதனை அடுத்து சதம் அடிக்க முடியாமல் தவித்து கொண்டு வந்தார்.

அதுமட்டுமின்று கடந்த ஆண்டு இறுதியில் கேப்டன் பதவியில் பல பிரச்சனைகள் இருந்தன. அதனால் அனைத்து விதமான போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி. பின்பு இப்பொழுது சமீப காலமாக இந்திய அணியில் சிறப்பாக கம்பேக் கொடுத்து விளையாடி வருகிறார்.

ஆசிய கோப்பை சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வருகிறார். அதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் சற்று வலுவாக காணப்படுகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை…!

ஸ்ரீதர் பேட்டி :

“விராட்கோலி இப்பொழுது அவருக்கு பிடித்த இடத்தை கைப்பற்றிவிட்டார். சில நேரம் அவர் எடுத்துக்கொண்ட இடைவெளி தான் இதற்கு முக்கியமான காரணம். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்துடன் இருந்த நேரமும் தான் இந்த கம்பேக்-க்கு முக்கியமான காரணம். ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம்.”

“அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் களமிறங்கிய விராட்கோலி சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடினார். அதனை பார்த்தாலே தெரிகிறது கிங் மீண்டும் கம்பேக் கொடுத்துவிட்டார் என்று. அவரது நோக்கம் சரியாக இருக்கிறது, பீல்டிங்-ல் சிறுத்தை போலவும் பேட்டிங்-ல் அட்டகாசமாகவும் விளையாடி வருகிறார் விராட்கோலி. இது நிச்சியமாக இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு நல்ல விஷயமாக தான் உள்ளது என்று கூறியுள்ளார்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here