உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நேற்று முன்தினம் முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 8 அணிகளுக்கு இடையே லீக் சுற்றுகள் நடைபெற்று வருகிறது.

முக்கியமான அணிகளுக்கு இடையே வருகின்ற அக்டோபர் 22ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாவே இந்திய அணியின் விளையாட்டில் பல முயற்சிகளை பார்க்க முடிகிறது.
ஆனால் உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய அணி தொடர்ந்து மோசமான நிலையில் வெளியேறி வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற உலகக்கோப்பை போட்டியிலும்,சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பையிலும் மோசமான நிலையில் வெளியேறியுள்ளது இந்திய.

அப்படி இருக்கும் நிலையில் இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்லுமா ? என்பது சந்தேகம் தான். இருந்தாலும் எப்படியாவது சிறப்பாக விளையாட வேண்டுமென்று முடிவு செய்த காரணத்தால் கடந்த 5ஆம் தேதி அன்றே இந்திய வீரர்கள் அனைவரும் ஆஸ்திரேலியாவிற்கு சென்றனர்.
அதில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். இந்திய அணியின் பேட்டிங்-ல் விராட்கோலி மற்றும் சூரியகுமார் யாதவின் பார்ட்னெர்ஷிப் நிச்சியமாக அதிரடியாக விளையாட உதவியாக இருக்கும். அதுவும் கடந்த பல மாதங்களாக விராட்கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருந்தது தான் உண்மை.

ஆனால் கடந்த ஆசிய கோப்பை 2022ல் இருந்து விராட்கோலியின் விளையாட்டில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி வெல்ல விராட்கோலியின் பங்களிப்பு உதவியாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் வெல்ல என்ன செய்ய வேண்டுமென்று அவரவர் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பிர் அவரது கருத்தை பதிவு செய்துள்ளார். அதிலும் விராட்கோலி இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இப்படி தான் விளையாட வேண்டுமென்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய கம்பிர் கூறுகையில் ; ” அனைத்து பந்திற்கும் ரன்களை ஓடி எடுக்க வேண்டும், அதனை விட்டு அவரது தனிப்பட்ட சாதனைக்காக விளையாட கூடாது என்று கூறியுள்ளார் கம்பிர்.”
விராட்கோலி இதுவரை 71 சதம் அடித்துள்ளார். அதுமட்டுமின்றி, அதிரடியாக விளையாடி பல சாதனை செய்து இந்திய கிரிக்கெட் அணிக்கு பெருமையை பெற்று கொடுத்துள்ளார் விராட்கோலி என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் விராட்கோலியின் பங்களிப்பு இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருக்குமா ?
0 Comments