ஆஸ்திரேலியா : கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை டி-20 உலகக்கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றனர். அதனால் விறுவிறுப்பான தொடருக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

பிசிசிஐ: இந்தியாவில் இருக்கும் மக்களில் அதிகமானவர்களுக்கு கிரிக்கெட் போட்டி தான் பிடிக்கும். அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டி 15 ஆண்டுகளாக நடத்தி வருகிறது பிசிசிஐ. உலக விளையாட்டு போட்டிகளில் செல்வாக்கு அதிகம் வாய்ந்த போட்டியாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகள் திகழ்கிறது.
கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சமீப காலம் வரை பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரான சௌரவ் கங்குலி தான் பதவியில் இருந்தார். அதனை அடுத்து இப்பொழுது பிசிசிஐ-யின் 36வது தலைவராக ரோஜர் பின்னி பதவியேற்றுள்ளார். அதனால் பல முன்னாள் வீரர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ரோஜர் பின்னி தலைவராக இந்திய கிரிக்கெட் அணியை எந்த அளவிற்கு முன்னேற்றி கொண்டு செல்ல போகிறார் ? பிசிசிஐ- தலைவராக பொறுப்பேற்ற உடனே இரு விஷயங்களை செயல்படுத்தியே ஆக வேண்டுமென்று கூறியுள்ளார் ரோஜர் பின்னி. அப்படி என்ன விஷயங்களை கவனிக்க போகிறார் ?
முதலில் வீரர்களுக்கு அடிக்கடி அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது. சமீபத்தில் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை அறிவித்த பின்பு பும்ராவிற்கு காயம் ஏற்பட்டது. அதனால் இந்திய அணியில் இடம்பெற முடியாமல் பெரிய தலை வலியாக மாறியுள்ளது தான் உண்மை.
இதனை பற்றி பேசிய ரோஜர் பின்னி கூறுகையில் ; “வீரர்களுக்கு அடிக்கடி காயம் ஏற்பட்டு வருகிறது. அதனை எப்படி தவிர்க்க வேண்டுமென்று கவனிக்க வேண்டும். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா காயம் காரணமாக வெளியேறியுள்ளார். அதனால் மொத்த பிளானும் வீணாகியுள்ளது.”

“இரண்டாவதாக நாட்டில் உள்ள பிட்ச்-ல் அதிகமான கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறன். உள்நாட்டில் விளையாடும் போட்டிகளில் விக்கெட்களில் அதிக மதிப்பு உள்ளது. ஏனென்றால், இங்கு சிறப்பாக விளையாடினால் தான் வெளிநாடுகளுக்கு செல்லும்போது எந்த தடுமாற்றமும் இருக்காது. ஆஸ்திரேலியாவை போல அதிக பவுன்ஸ் மற்றும் வேகம் இருக்கும்.” என்று கூறியுள்ளார் ரோஜர் பின்னி.
இந்திய கிரிக்கெட் அணியில் என்ன என்ன விஷயங்களை பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி சரி செய்ய வேண்டுமென்று நீங்க நினைக்குறிங்க ?
0 Comments