இவர் இருக்கும் போது பும்ராவை கேப்டனாக நியமனம் செய்தது மிகவும் தவறு ; முன்னாள் வீரர் அதிரடி பேட்டி

0

இந்திய மற்றும் இங்கிலாந்து :

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டிகள் இன்று மதியம் 3 மணியளவில் தொடக்க உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.

ரோஹித் சர்மா:

இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா சில மாதங்களுக்கு முன்பு தான் நியமனம் ஆனார். இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் செய்த ரோஹித் சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதனால் அவரால் ஐந்தாவது போட்டியில் விளையாட முடியாத சூழல் எழுந்துள்ளது.

இந்திய அணியின் கேப்டன்:

ரோஹித் ஷர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியான நிலையில், இப்பொழுது இந்திய அணியின் கேப்டனாக பும்ரா இடம்பெற்றுள்ளார். அதனை பலர் வரவேற்றாலும், சிலர் அதற்கு மாற்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆமாம், இந்திய அணியில் பல முன்னணி பேட்ஸ்மேன்கள் இருக்கும் நிலையில் பும்ரா கேப்டனா ?

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான வாசிம் ஜாபர் கூறுகையில் ; “நான் டெஸ்ட் போட்டிகளில் பல முறை புஜாரா கேப்டனாக வழிநடத்தியதை பார்த்துள்ளேன். அவருக்கு எல்ல திறமையும் உள்ளது. பும்ரா துணை கேப்டனாக இந்திய அணியில் விளையாடியுள்ளார்.”

“ஆனால் இப்பொழுது இருக்கும் போட்டியின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு கேப்டனை நியமனம் செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. டெஸ்ட் போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத நிலையில் எப்படி இந்திய அணியை வழிநடத்த முடியும் ? எப்படி ஹர்டிக் பாண்டிய கம்பேக் கொடுத்தாரோ, அதேபோல பும்ரா சிறப்பாக வழிநடத்த வாய்ப்பு உள்ளது “

“புஜாரா ப்ளேயிங் 11ல் இடம்பெறுவது கடினமாக தான் இருந்தது. ஏனென்றால் இறுதியாக விளையாடிய போட்டியில் புஜாரா இடம்பெறவில்லை. அப்படி இருக்கும் நிலையில் கேப்டன் பதவி கொடுப்பது கடினமான விஷயம் தான் என்று கூறியுள்ளார் வாசிம் ஜாபர்..!”

வாசிம் ஜாபர் சொன்னது போல இந்திய கிரிக்கெட் அணியை யார் வழிநடத்தினால் சிறப்பாகவும் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்கும் ? உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழே உள்ள COMMENTS பக்கத்தில் பதிவு செய்யுங்கள்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here