இந்திய அணியின் மோசடி மன்னன் இவர் தான் ; இதற்கு மேல் இவருக்கு வாய்ப்பு கொடுக்க கூடாது ; ரசிகர்கள் ஆவேசம் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பல திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுதெல்லாம் ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடினால் நிச்சியமாக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் விளையாட கூட அதிக வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி மோசமான நிலையில் அரையிறுதி-க்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. இது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. அதற்கு முக்கியமான காரணம் தொடக்க சரியாக அமையாதது தான்.

இறுதியாக நடைபெற்ற சர்வதேச டி-20 போட்டிகளில் பல தொடக்க வீரர்கள் இந்திய அணியில் விளையாடி வருகின்றனர். அதில் ரிஷாப் பண்ட், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, கே.எல்.ராகுல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் விளையாடி உள்ளனர்.

ஆனால் சரியான தொடக்க வீரர், அதுவும் ரோஹித் ஷர்மாவிற்கு சிறந்த பார்ட்னெர்ஷிப் யாராக இருப்பார் என்று பல குழப்பங்கள் எழுந்தது. பின்னர் தீடிரென்று ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் கே.எல்.ராகுலை துணை கேப்டனாக நியமனம் செய்தது பிசிசிஐ. இது ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை போட்டியில் 132 ரன்களை மட்டுமே அடித்துள்ளார், அதுவும் தொடக்க வீரராக களமிறங்கி. சில தினங்களுக்கு முன்பு இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. அதில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியுள்ளது இந்திய.

வெற்றிக்கு முக்கியமான காரணம் விராட்கோலியின் அதிரடியான ஆட்டம் தான். வழக்கம் போல இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் மற்றும் ரோஹித் சர்மா தலா 4 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்துள்ளார். மற்ற போட்டிகளை விட பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி என்பது ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

அந்த போட்டியில் கே.எல்.ராகுல் நசீம் ஷா வீசிய பந்தில் போல்ட் அவுட் ஆனார் கே.எல்.ராகுல். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது தான் உண்மை. இதனை பற்றி பல கிரிக்கெட் ரசிகர்கள் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதிலும் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் மோசடி மன்னன் கே.எல்.ராகுல் என்று பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here