நானும் விராட்கோலியும்- இதை செய்ய முடிவு செய்தோம் ; ஆனால்..! இது எனக்கு பிடிக்கவே இல்லை ; என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை ; ரோஹித் சர்மா ஓபன் டாக் ;

0

போட்டி 23: நேற்று மதியம் 12:30 மணியளவில் தொடங்கிய போட்டியில் ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. அதில் டாஸ் வென்ற இந்தியா கிரிக்கெட் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணிக்கு நிதானமான தொடக்க ஆட்டம் அமைந்தது. வழக்கம் போல தொடக்க வீரரான கே.எல்.ராகுல் 9 ரன்களை அடித்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஆனால் நிதானமாக விளையாடிய ரோஹித் சர்மா அரைசதம் அடித்தார்.

பின்பு விராட்கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரும் இணைந்து 100க்கு மேற்பட்ட ரன்களை விளாசினார்கள். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டை இழந்த இந்திய கிரிக்கெட் அணி 179 ரன்களை அடித்தனர். அதில் கே.எல்.ராகுல் 9, ரோஹித் சர்மா 53, விராட்கோலி 62*, சூர்யகுமார் யாதவ் 51* ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர்.

பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து அணி. எதிர்பார்த்த அளவிற்கு தொடக்க ஆட்டம் மட்டுமின்றி பார்ட்னெர்ஷிப்-ம் சரியாக அமையாத காரணத்தால் ரன்களை அடிக்க தடுமாறியது நெதர்லாந்து அணி. இறுதி ஓவர் வரை போராடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 123 ரன்களை அடித்தனர்.

அதில் சிங் 1, மேக்ஸ் ஒடோவ்ட் 16, பஸ் டீ 16, கொலின் அக்கர்மன் 17, டிம் பிரிங்கிலே 20 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது இந்திய கிரிக்கெட் அணி. அதுமட்டுமின்றி 4 புள்ளிகளுடன் குரூப் 2ல் முதல் இடத்தில் உள்ளது இந்திய.

இறுதியாக யார் முதல் இரு இடங்களில் இடம்பெற போகும் அணி தான் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற முடியும். அதனால் அனைத்து அணிகளும் கடுமையான போட்டியில் விளையாடி வருகின்றனர். போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் ;

“இன்றைய தினம் சிறப்பாக தான் இருக்கிறது. சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு போட்டியில் வென்றோம். பின்பு உடனடியாக சிட்னி மைதானத்தில் அனைத்து வீரர்களும் ஒன்று கூடி விளையாட வேண்டுமென்று முழு கவனமாகஇருந்தோம். ஏனென்றால், சூப்பர் 12 அணிகளுக்கு இடையேயான போட்டியில் இடம்பெற நெதர்லாந்து என்ன செய்தார்கள் என்பதை நாங்கள் கவனித்துள்ளோம்.”

“நிச்சியமாக அந்த பெருமை அவர்களுக்கு தான். இருந்தாலும் தொடக்கத்தில் நாங்கள் சற்று நிதானமாக தான் பேட்டிங் செய்தோம். ஆனால் நானும், விராட்கோலியும் பேசிக்கொண்டது ; நிதானமாக விளையாடி பெரிய ஷாட்ஸ் -களை அடிக்க வேண்டுமென்று தான் முடிவு செய்தோம். நான் இன்றைய போட்டியில் அடித்த அரைசதம் எனக்கு மகிழ்ச்சியாக இல்லை. இருந்தாலும் அணிக்கு அது முக்கியமான ரன்களாக மாறியுள்ளது என்று கூறியுள்ளார் ரோஹித் சர்மா.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here