இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ரோஹித் சர்மா இந்த பையன் தான் ; ஷிகர் தவான் ஓபன் டாக்

0

இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான தொடர் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 3 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தனர். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை வென்று தொடரை கைப்பற்றினர்.

இப்பொழுது அதனை தொடர்ந்து ஐந்து டி-20 போட்டிக்கான தொடர் போட்டிகள் நடைபெற உள்ளது. இன்று இரவு 8 மணியளவில் நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோத உள்ளனர். இந்த போட்டி டிரினிடாட்-ல் உள்ள பிரைன் லாரா மைதானத்தில் நடைபெற உள்ளது.

அதனால் இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏனென்றால் இந்த இறுதியில், அதாவது அக்டோபர், நவம்பர் மாதத்தில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் இனிவரும் போட்டிகளில் நிச்சியமாக இந்திய அணி மிகவும் கவனமாக விளையாடும் என்பதில் சந்தேகமில்லை.

சமீபத்தில் நடந்து முடிந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது இந்திய. அதில் தொடக்க வீரரான சுமன் கில் இறுதிவரை போராடி 98 ரன்களை அடித்து ஆட்டம் இழக்காமல் விளையாடினார். இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணம் என்று கூட சொல்லாமல்.

அதுமட்டுமின்றி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடிய சுமன் கில் 205 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி மூன்றாவது போட்டியில் ப்ளேயர் ஆஃப் தீ மேட்ச் மற்றும் தொடரில் ப்ளேயர் ஆஃப் தீ சீரியஸ் விருதை பெற்றுள்ளார் சுமன் கில்.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில் ; ” இந்திய வீரர்களில் மிகவும் திறமையான வீரர் தான் சுப்மன் கில், அவரது பேட்டிங்-ல் எப்பொழுதும் ஒரு விதமான நுணுக்கம் இருக்கும்.”

“என்னை பொறுத்தவரை அவ்வப்போது சுப்மன் கில் விளையாடி கொண்டு இருக்கும்போது பார்த்தால் ரோஹித் ஷர்மாவை போலவே இருக்கும், இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இருப்பினும் அவரது ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவருக்கான நேரத்தை கையில் எடுத்துக்கொண்டு சிறப்பாக விளையாடினார். அவருக்கு நன்கு தெரியும் எப்படி அரைசதத்தை 90 ரன்களாக மாற்ற வேண்டுமென்று என்று கூறியுள்ளார் ஷிகர் தவான்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here