தோனி அன்று செய்த விஷயத்தை நான் எப்பொழுது மறக்கவே மாட்டேன் ; தோனியின் குணம் இதுதான் ; விராட்கோலி பேட்டி ;

0

இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக இருந்துள்ளார் விராட்கோலி. மகேந்திர சிங் தோனிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியை சிறப்பாக வழிநடத்தி வந்துள்ளார். அதிலும் டெஸ்ட் போட்டிகளில் மோசமான நிலையில் இருந்த இந்திய அணி, விராட்கோலி தலைமையில் இருந்த நேரத்தில் டாப் 2வது இடத்தை பிடித்தது இந்திய.

ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு விராட்கோலியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது தான் உண்மை. தொடர்ந்து பல போட்டிகளில் அரைசதம் கூட அடிக்க முடியாமல் தவித்து வந்துள்ளார் விராட்கோலி. அதுமட்டுமின்றி விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி எந்த விதமான ஐசிசி போட்டிகளிலும் கோப்பையை வென்றது இல்லை.

அதனால் கடந்த ஆண்டு டி-20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு நான் டி-20 போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலக போவதாக விராட்கோலி கூறியுள்ளார். பின்பு பிசிசிஐ-யின் அதிரடியான முடிவால் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட்கோலியை நீக்கினார்கள்.

அதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பல குழப்பங்கள் நிலவியது. பின்பு வெறும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே கேப்டனாக விளையாடி வந்தார் விராட்கோலி. ஆனால் அதுவும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி பெற்றது. பின்னர் தீடிரென்று கேப்டன் பதவியில் இருந்து விலகினார் விராட்கோலி.

இப்பொழுது வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் சிறப்பாக விளையாடி வருகிறார் விராட்கோலி. அப்பொழுதும் போர்மில் இல்லாமல் இருந்த விராட்கோலி, ஆசிய கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியில் விராட்கோலி 60 ரன்களை அடித்துள்ளார்.

நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய விராட்கோலி சில முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார். அதில் ” நான் டெஸ்ட் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு ஒருவர் கூட எனக்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசவில்லை. என்னுடைய நம்பர் பலரிடம் உள்ளது. ஆனால் அவர்களில் பலர் மீடியா முன்பு அவர்களது கருத்துக்களை பதிவு செய்துவந்தனர். ஆனால் என்னிடம் யாரும் பேசவில்லை.”

“அப்பொழுது எனக்கு தனிப்பட்ட முறையில் என்னிடம் பேசிய ஒருவர் தோனி மட்டும் தான். அவருக்கு என்மேலையும், எங்கள அவர்மேலையும் மரியாதை உண்டு. இந்த உறவை நாங்கள் ரகசியமாக வைத்திருக்கிறோம். எனக்கு அவரிடம் இருந்து ஏதும் வேண்டாம், அவருக்கும் என்னிடம் இருந்து எதுவும் தேவைப்படாது.”

“ஆனால் இந்த மாதிரியான நேரத்தில் பேசுவது மிகவும் ஆறுதலான விஷயம் தான். நான் ஏதாவது யாரிடமாவது சொல்ல நினைத்தால் அவரிடம் நான் தனிப்பட்ட முறையில் பேசுவேன். அதைவிட்டுவிட்டு ஏதாவது சொல்ல வேண்டியதை உலகத்திற்கு முன்பு சொன்னால் எனக்கு பிடிக்காது.”

“என்னிடம் வந்து பேசினால் தான் சரியாக இருக்கும். கிரிக்கெட் பார்க்கும் ரசிகர்கள் பலர் அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களுது கருத்து நிச்சியமாக என்னை எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவே படுத்தாது என்று கூறியுள்ளார் விராட்கோலி.”

ஆசிய கோப்பை 2022 டி-20 லீக் போட்டிகளில் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடிய விராட்கோலி 154 ரன்களை அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here