அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற இந்திய அணி இதை செய்யவேண்டும் ; இல்லையென்றால் வெளியே தான் ;

0

உலகக்கோப்பை போட்டிகள் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதனால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பான தொடருக்கு நிச்சியமாக பஞ்சம் இருக்காது.

பட்டைய கிளப்பும் இந்திய கிரிக்கெட் அணி :

மற்ற போட்டிகளை காட்டிலும் இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி வருகின்றனர். அதிலும் குறிப்பாக முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை வென்ற இந்திய அணிக்கு அதிகப்படியான நம்பிக்கை வந்துள்ளது. அதனால் தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றனர்.

நேற்று நடந்த போட்டியில் நெதர்லாந்து மற்றும் இந்திய அணிகள் மோதின. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 179 ரன்களை அடித்தனர். பின்பு 180 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது நெதர்லாந்து அணி. ஆனால் தோல்வி தான் மிஞ்சியது.

இறுதி ஓவர் வரை விளையாடிய நெதர்லாந்து அணி 9 விக்கெட்டை இழந்த நிலையில் 123 ரன்களை மட்டுமே அடித்தனர். அதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வென்றது இந்திய. அதனால் புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளை பெற்ற நிலையில் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணிக்கு அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவது சுலபம் தானா ?

சமீப காலமாக மற்ற அணிகளுக்கு இடையேயான சீரியஸ் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி தொடரை வென்றுள்ளனர். ஆனால் ஆசிய , உலகக்கோப்பை போன்ற போட்டிகளில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி சொதப்பி வருகிறது தான் உண்மை.

அதுமட்டுமின்றி, சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பைக்கான போட்டியிலும் இந்திய கிரிக்கெட் அணி முதல் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றியை கைப்பற்றி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றனர். ஆனால் அங்கு தொடர்ந்து தோல்விகளை சந்தித்த காரணத்தால் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது இந்திய.

அதனால் இந்த முறை அப்படி நடந்தால் அரை இறுதிக்கான வாய்ப்பு குறைந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இப்பொழுது குரூப் 2ல் இந்திய அணி விளையாடிய இரு போட்டிகளில் வென்ற நிலையில் முதல் இடத்தில்உள்ளது. இருந்தாலும் பங்களாதேஷ் போன்ற அணிகளுக்கு இடையேயான போட்டிகள் இந்திய அணிக்கு சவாலாக இருக்க அதிகவாய்ப்பு உள்ளது.

இன்னும் இரு போட்டிகளில் குறைந்தது இந்திய அணி வென்றால் மட்டுமே முதல் இடத்தை கைப்பற்ற முடியும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆண்டு ஐசிசி டி-20 2022 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறுமா ? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here