வீடியோ : போட்டியை திருப்பிப்போட்டு அந்த ரன் -அவுட் தான் இது ; பா..! Direct Hit செய்த கே.எல்.ராகுலுக்கு குவியும் பாராட்டு ;

0

34வது போட்டியின் சுருக்கம் :

நேற்று ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் மோதின. இதுவரை இந்த ஒரு அணிகளும் 11 சர்வதேச டி-20 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இந்திய அணி அதிகபட்சமாக 10 போட்டிகளிலும் பங்களாதேஷ் அணி 1 போட்டியிலும் வென்றுள்ளனர்.

Kl Ragul

இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பவுலிங்கை தேர்வு செய்தனர். அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணிக்கு வழக்கம் போல தொடக்க ஆட்டம் சிறப்பாக அமையவில்லை. ரோஹித் சர்மா விக்கெட்டை இழந்த பிறகு சரியான பார்ட்னெர்ஷிப் அமையாமல் தவித்து வந்தது இந்திய.

அதிலும் விராட்கோலியின் அதிரடியான ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த இந்திய 184 ரன்களை அடித்தனர். பின்பு 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இமாலய இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி. இந்திய ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டம் அந்த அளவிற்கு சிறப்பாக அமைந்தது.

அதிலும் பவர் ப்ளே -வில் பட்டைய கிளப்பிய பங்களாதேஷ் அணியின் தொடக்க வீரரான லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடினார். அவரது விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் தவித்தது இந்திய. 27 பந்தில் 60 ரன்களை விளாசி இந்திய அணிக்கு ஆபத்தாக மாறினார்.

ஆனால், 7.2 வது ஓவரில் பவுலிங் செய்த ரவிச்சந்திரன் அஸ்வின் பந்தை எதிர்கொண்டார் சாண்டோ. அதனை அடித்த சாண்டோ ஒரு ரன் ஓடி முடிந்த நிலையில் இன்னொரு ரன்னுக்கு ஆசைப்பட்டு ஓடினார்கள். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரரான கே.எல்.ராகுல் துளியாக பந்தை ஸ்டம்ப் பார்த்து வீசினார்.

அது சரியாக தாஸ் போகும் நேரத்திற்கு முன்பு ஸ்டம்ப்-ல் அடித்தது. அதனால் விக்கெட்டை இழந்தார் லிட்டன் தாஸ். அதனால் இந்திய அணியின் நிலைமை அப்படியே மாறியது.

இருந்தாலும் கேப்டன் ஷாகிப், நூருல் ஹசன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை அடித்தனர். ஆனால் இறுதி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது பங்களாதேஷ் அணி. ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்து வீச்சால் 15 ரன்களை மட்டுமே அடித்த பங்களாதேஷ். அதனால் 5 ரன் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய.

குரூப் 2 புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்திலும், 5 புள்ளிகளுடன் தென்னாபிரிக்கா அணி இரண்டாவது இடத்திலும், 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் பங்களாதேஷ் அணியும் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here