இந்திய அணியில் இந்த நான்கு வீரர்களின் விக்கெட்டை கைப்பற்றினால் போதும் என்று நினைத்தோம் ; ஷாகிப் ஓபன் டாக் ;

0

உலக கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

35வது போட்டி : அடேலைட்டே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், ஷாகிப் தலைமையிலான பங்களாதேஷ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தனர்.

அதனால் அதிரடியாக விளையாடி டார்கெட் செட் செய்ய களமிறங்கியது இந்திய. ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனென்றால் தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் முதல் 10 ஓவர்கள் பொறுமையாக விளையாடினார்கள். அதிலும் ரோஹித் சர்மா 2 ரன்கள் அடித்த நிலையில் விக்கெட்டை இழந்தனர்.

வழக்கம் போல இந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் போல திகழும் விராட்கோலி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்த இந்திய அணி 184 ரன்களை அடித்தனர்.

அதில் கே.எல்.ராகுல் 50,ரோஹித் சர்மா 2, விராட்கோலி 64*, சூர்யகுமார் யாதவ் 30 ரன்களை அதிகபட்சமாக அடித்துள்ளனர். பின்பு 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பங்களாதேஷ் அணி. ஆரம்பித்தில் சிங்கம் போல அதிரடியாக ரன்களை குவித்தனர்.

அதனால் இந்திய அணிக்கு தோல்வி தான் என்ற நிலை உருவானது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்டை இழந்தனர். இருந்தாலும் 16 ஓவர் முடிவும் வரை போராடிய பங்களாதேஷ் அணி 6 விக்கெட்டை இழந்த நிலையில் 145 ரன்களை மட்டுமே அடித்தனர்.

அதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது இந்திய. போட்டி முடிந்த பிறகு பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷாகிப் கூறுகையில் ; ” இது இன்னைக்கு நேற்று நடந்த விஷயம் இல்லை. பல போட்டிகளில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் இறுதிவரை போராடிய வெற்றியை கைப்பற்ற வருவோம், ஆனால் இறுதியாக தோல்வி தான் எங்களுக்கு கிடைக்கும்.”

“ஆனால் நிச்சியமாக இன்றைய போட்டியை இரு (இந்திய மற்றும் பங்களாதேஷ்) அணிகள் சந்தோசமாக விளையாடினோம். இதுபோன்ற சுவாரஷியமான போட்டி தான் எங்களுக்கு தேவை. எப்படியும் ஒரு போட்டியின் இறுதியில் ஒரு அணி வெற்றியையும், இன்னொரு அணி தோல்வியையும் பெற போகிறது உறுதி தான்.”

“அதிலும் குறிப்பாக எங்கள் அணியின் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தார். அவரது பங்களிப்பு எங்கள் அணியின் வெற்றிக்கு காரணமாக மாறியது. ஆனால் குறைவான பவுண்டரிகளால் அதனை தவறவிட்டோம். இந்திய அணியின் முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் (விராட்கோலி, கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ்) மிகவும் ஆபத்தான வீரர்கள் தான்.”

“அதனால் அவர்களுது விக்கெட்டை கைப்பற்ற தான் தஸ்கின் ஐ- பவுலிங் செய்ய வைத்தோம். ஆனால், எதிர்பாராத வகையில் அவரால் விக்கெட்டை கைப்பற்ற முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் பரவாயில்லை, நினைத்த அனைத்து விஷயங்களும் நடக்கும் என்பது உறுதி இல்லை.”

“இந்த உலகக்கோப்பை போட்டியில் நடந்து வரும் போட்டியை பற்றி அதிகம் பேச நான் விரும்பவில்லை. இன்னும் மீதம் ஒரு போட்டி எங்களுக்கு உள்ளது. அதில் எப்படி விளையாட வேண்டுமென்று கவனம் செலுத்த போகிறேன் என்று கூறியுள்ளார் ஷாகிப்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here