ரிஷாப் பண்ட் -க்கு இனி வாய்ப்பு இல்லை ; இந்த பையன் தான் ரிஷாப் பண்ட் இடத்தை கைப்பற்ற போகிறார் ; டெல் ஸ்டெய்ன் ஓபன் டாக் ;

0

இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷாப் பண்ட் இடத்திற்க்கு ஆபத்து தான். ஏனென்றால் மிடில் ஆர்டரில் இந்த பையன் பட்டைய கிளப்பி விளையாடுகிறார் தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டெல் ஸ்டெய்ன் ஓபன் டாக் ;

சமீப காலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் டி-20 லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அதில் இஷான் கிஷான் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடி வருகிறார்.

வாய்ப்பு எந்த அளவிற்கு இளம் வீரர்களுக்கு கிடைக்கிறதோ, அதேபோல தான் அனுபவம் வாய்ந்த பல வீரர்களுக்கும் இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டு வருகிறார். அதில் சமீப காலமாக இந்திய அணியின் பினிஷராக வளம் வந்த ரிஷாப் பண்ட் -க்கும் வாய்ப்பு கிடைப்பது இல்லை.

ஐபிஎல் 2022 போட்டிகளில் அதிரடியாக விளையாடிய தினேஷ் கார்த்திக் மீண்டும் இந்தியா அணியில் இடம்பெற்றார். அதுமட்டுமின்றி, ரிஷாப் பண்ட் -ஐ காட்டிலும் இந்திய அணியின் சிறந்த பினிஷராக மாறியுள்ளார் தினேஷ் கார்த்திக். அதனால் இப்பொழுது ரிஷாப் பண்ட் -க்கு தொடர்ந்து இந்திய அணியில் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை.

என்னதான் வாய்ப்பு கொடுத்தாலும் ரிஷாப் பண்ட் பெரிய அளவில் ரன்களை அடிக்க முடியாமல் திணறிக்கொண்டு வருகிறார் என்பது தான் உண்மை. இதனை பற்றி பேசிய தென்னாபிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டெல் ஸ்டெய்ன் ரிஷாப் பண்ட் -க்கு பதிலாக இவர் தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கூறியுள்ளார்.

மேலும் இதனை பற்றி பேசிய ஸ்டெய்ன் கூறுகையில் ; ” நான் ஐபிஎல் போட்டிகளில் இஷான் கிஷானிடம் விளையாடியுள்ளேன். நான் அவருக்கு பட்ட பெயராக ஜஸ்டின் பீபர் என்று வைத்துள்ளேன். ஏனென்றால் கிரிக்கெட் போட்டிகளில் இவர் (இஷான் கிஷான்) தான் ராக் ஸ்டார். நாளுக்கு நாள் அவரது விளையாட்டில் முன்னேறிக்கொண்டே தான் வருகிறது.”

“சின்ன பையனான இஷான் கிஷான் அடிக்கும் ஷாட்ஸ் மிகவும் அற்புதமான ஒன்று. சரியான நேரத்தை பயன்படுத்தி சிக்ஸர் அடித்து வருகிறார். இந்திய அணியில் இருக்கும் முக்கியமான வீரர்களுள் இஷான் கிஷானும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. அதனால் ரிஷாப் பண்ட் நிச்சியமாக வருத்தப்பட வேண்டும். ஏனென்றால் அவருடைய (ரிஷாப் பண்ட்) இடத்திற்கு இஷான் கிஷான் ஆபத்தாக மாற போகிறார் என்று கூறியுள்ளார் டெல் ஸ்டெய்ன்.”

சமீபத்தில் நடந்து முடிந்த பயிற்சி ஆட்டத்தில் இந்திய மற்றும்ஜ வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அதில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளனர். ஆனால் தொடக்க வீரராக களமிறங்கிய ரிஷாப் பண்ட் 9 ரன்களை அடித்த நிலையில் விக்கெட்டை இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here