தோனியை மிஸ் பண்றிங்களா ? கேள்வி கேட்டதற்கு கடுப்பான ஷர்டுல் தாகூர் சொன்ன பதில் இதுதான் ;

0

கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் வீரரான மகேந்திர சிங் தோனியை யாராலும் மறக்கவே முடியாது. ஏனென்றால் எந்த வீரரும் செய்யாத ஒரு செயலை செய்துள்ளார் தோனி. ஆமாம், இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி மட்டும் தான் அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளனர்.

தோனி கடந்த ஆண்டு 2004ஆம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வருகிறார். ஆனால் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். ஆனால் இன்னும் ஐபிஎல் டி-20 போட்டிகளில் மட்டும் ஓய்வு பெறாமல் விளையாடி வருகிறார் தோனி.

அதுமட்டுமின்றி, தோனி கேப்டனாக இருக்கும் அணியில் விளையாட அனைத்து விதமான வீரர்களுக்கு ஆசையாக இருப்பது தான் வழக்கம். ஏனென்றால், அவரது அனுபவம் போட்டியை எதிர்கொள்ளும் விதம் நிச்சியமாக இளம் வீரர்களுக்கு உதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

ஹர்டிக் பாண்டிய காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் ஆல் – ரவுண்டராக விளையாடி பல போட்டிகளில் இந்திய அணி வெல்ல முக்கியமான காரணமாக திகழ்கிறார் ஷர்டுல் தாகூர். அதுமட்டுமின்றி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

30 வயதான ஷர்டுல் தாகூர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் வரை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தான் சிறப்பாக விளையாடி வந்துள்ளார். ஆனால் 2022 போட்டியின் மெகா ஏலத்தில் சென்னை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஷர்டுல் தாகூர் டெல்லி கேபிட்டல்ஸ் அணி கைப்பற்றியுள்ளனர்.

சமீபத்தில் ஷர்டுல் தாகூர் செய்தியாளர்களை சந்தித்த போது தோனியை மிஸ் பண்றிங்களா என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷர்டுல் தாகூர் ; “தோனியை நான் மட்டுமில்லை அனைவரும் மிஸ் செய்வார்கள். அவருடன் விளையாடும் போது பல அனுபவங்கள் பல கிடைக்கும். 350 ஒருநாள் போட்டிகள் மற்றும் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோனிக்கு பல அனுபவம் இருக்கும்.”

“அப்படி பட்ட வீரருடன் நானும் சில ஆண்டுகள் அவருடன் விளையாடியுள்ளேன். அப்பொழுது அவரிடம் இருந்து பல அனுபவத்தை கற்றுள்ளேன் அது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி, நான் ஐபிஎல் 2022 போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறேன். அதனால் அவருடன் விளையாடாதது சற்று வருத்தமாக தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ஷர்டுல் தாகூர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here