ஆஸ்திரேலியா : உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருந்த ஐசிசி டி-20 உலகக்கோப்பை 2022 போட்டிகள் நேற்று முதல் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அணியில் நடந்த மிகப்பெரிய மாற்றம் :
கடந்த மாதம் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்க போகும் 15 பேர் கொண்ட வீரர்களின் பட்டியலை அறிவித்தது பிசிசிஐ. அதில் ஜஸ்பிரிட் பும்ரா இடம்பெற்றிருந்தார். ஆனால் எதிர்பாராத வகையில் அவருக்கு காயம் ஏற்பட்ட காரணத்தால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமத் ஷமி இடம்பெற்றுள்ளார்.
பும்ராவிற்கு சரியாக ஷமியின் பவுலிங் இருக்குமா ? இந்திய அணியால் சரியாக பவுலிங் செய்ய முடியுமா ? ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே இந்திய அணியின் பேட்டிங் வலுவாக இருந்தாலும் பவுலிங் மோசமான நிலையில் இருப்பது தான் உண்மை. இந்திய கிரிக்கெட் அணி என்னதான் 200க்கு மேற்பட்ட ரன்களை அடித்தாலும், பவுலிங் மோசமான நிலையில் இருப்பதால் தோல்விகளை சந்தித்து வருகிறது.

உதாரணத்திற்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய கோப்பை டி-20 லீக் போட்டிகளில் சுலபமாக வெற்றிபெற்றிருக்க வேண்டிய போட்டிகளில் மோசமான பவுலிங் காரணமாக தோல்விகளை சந்தித்து இந்திய. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி அன்றே இந்திய வீரர்களில் பலர் ஆஸ்திரேலியாவிற்கு வந்து பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
இந்த முறை எப்படியாவது உலகக்கோப்பையை வெல்ல இந்திய கிரிக்கெட் அணி அனைத்து விதமான முயற்சிகளையும் கையில் எடுத்துள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற உள்ளது. அதனால் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர்.

வலைப்பயிற்சி செய்து கொண்டு இருந்த இந்திய வீரர்களில் ஷமி வீசிய பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார், ஆனால் அந்த பந்து எதிர்பாராத வகையில் ஸ்டம்ப்-ல் பட்டது. அதன் வீடியோ இப்பொழுது இணையத்தை கலக்கி வருகிறது. அதுமட்டுமின்றி, ஷமி சர்வதேச டி-20 லீக் போட்டிகளில் வேறு 17 போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளார். அதில் 18 விக்கெட்டை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகக்கோப்பை 2022 போட்டியில் பும்ராவிற்கு பதிலாக ஷமி இடம்பெற்றுள்ளது சரியான ஒரு மாற்றமா ? இல்லையா ? உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்கள்..!
0 Comments