வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் செய்த விஷயத்தை கூட ஷிகர் தவான் செய்யவில்லை ; இதற்கு பெயர் தான் கேப்டனா ? கடுப்பான ரசிகர்கள் ;

0
Shikhar Dhawan (L) of India and Nicholas Pooran (R) of West Indies with the ODI trophy one day before the 1st ODI match between West Indies and India at Queens Park Oval, Port of Spain, Trinidad and Tobago, on July 21, 2022. - Team India is on a cricket tour against team West Indies from July 22 to August 7, 2022. (Photo by Randy Brooks / AFP) (Photo by RANDY BROOKS/AFP via Getty Images)

இன்று இரவு 7 மணியளவில் போர்ட்ஸ் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் நடைபெற தொடங்கிய போட்டியில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர்.

இதுவரை நடந்த இரு போட்டிகளிலும் இந்திய அணி வென்று 2 – 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது இந்திய. அதனால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமில்லாத ஒன்று தான். இருப்பினும் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி தொடக்க வீரராக களமிறங்கிய சுமன் கில் மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தி விளையாடினர். சரியாக 34 ஓவர் முடிந்த நிலையில் 115 ரன்களை அடித்து 1 விக்கெட்டையும் இழந்துள்ளது இந்திய. அதில் ஷிகர் தவான் 58, சுமன் கில் 51 மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களை அடித்துள்ளனர்.

பின்பு மழை வந்த காரணத்தால் இப்பொழுது போட்டி நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ஷிகர் தவான் ஒரு கேப்டனாக செய்த செயல் மிகவும் தவறான ஒன்று தான் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஏனென்றால் ஆறுதல் வெற்றியை ஆவது கைப்பற்றிவிடலாம் என்று வெஸ்ட் இண்டீஸ் அணி உள்ளது.

அவர்களே முதல் இரு போட்டிகளில் விளையாடாத வீரருக்கு வாய்ப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக ஜேசன் ஹோல்டர், கீமோ, கார்ட்டி போன்ற வீரர்களுக்கு வாய்ப்பை கொடுத்துள்ளனர். அப்படி இருக்கும் நிலையில், இந்திய அணியில் மட்டும் மாற்றம் எதுவும் நடக்கவில்லை.

இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுத்தால் தான் யார் எப்படி விளையாடுகிறார்கள் என்று தெரியும். இந்திய அணி முதல் இரு போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் நிச்சியமாக ரோஹித் சர்மா கேப்டனாக இருந்திருந்தால் பெஞ்ச்-ல் இருக்கும் வீரர்களுக்கு ஒரு போட்டியில் ஆவது வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆனால் ஷிகர் தவான் வெறும் ஒரு பவுலரை மட்டும் தான் மாற்றம் செய்துள்ளார். இதில் ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷான், அர்ஷதீப் சிங் போன்ற முக்கியமான இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை. அதுமட்டுமின்றி, இன்னும் சில ஆண்டுகளில் ரோஹித் சர்மா, தவான், விராட்கோலி போன்ற வவீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணியில் இளம் வீரர்கள் இடம்பெற வேண்டும்.

அதனால் அதனை மனதில் வைத்துக்கொண்டு அவ்வப்போது இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் சிறப்பான இந்திய உருவாகும் என்பதில் சந்தேகமில்லை. மூன்றாவது போட்டியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டுமா ? இல்லையா ??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here