ரோஹித் இல்லையென்றாலும் கவலையில்லை ; இவங்க இருவர் இருக்கும்வரை இந்திய அணியின் தொடக்க ஆட்டத்திற்கு பயம் இருக்காது ;

0

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும், நிக்கோலஸ் பூரான் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் விளையாடி வருகின்றனர். இதில் மொத்தம் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் நடைபெற உள்ளது. இங்கிலாந்து அணியை வென்றது போலவே வெஸ்ட் இண்டீஸ் அணியை வெல்லுமா இந்திய ?

இதில் ரோஹித் சர்மா, விராட்கோலி, பும்ரா மற்றும் இன்னும் சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஷிகர் தவான் கேப்டனாகவும், அதிக இளம் வீரர்களை கொண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒருநாள் போட்டியில் எதிர்கொண்டு விளையாடி வருகின்றனர்.

இன்றைய போட்டி போர்ட்ஸ் ஆஃப் ஸ்பெயின் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. எப்பொழுதும் ஒரு போட்டி நடைபெற தொடங்கினால் தொடக்க ஆட்டம் மிகவும் முக்கியமான ஒன்று என்பதில் மாற்றமில்லை. ஏனென்றால் தொடக்க வீரர்களை முடிந்தவரை ரன்களை அடித்து ஆட்டம் இழந்தால் தான் அடுத்தடுத்து வரும் வீரர்களால் சரியாக விளையாட முடியும்.

அப்படி பார்த்தால் இதுவரை இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகிய இருவரும் தான் அதிகப்படியான போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி வந்துள்ளனர். ஆனால், இந்த தொடரில் இருவரும் இல்லாத நிலையில் ஷிகர் தவான் மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக விளையாடி வருகின்றனர்.

முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் செய்ய முடிவு செய்தனர். அதனால் வேறு வழியில்லாமல் இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் செய்து வருகின்றனர். ஆனால் டி-20 போட்டியில் விளையாடுவது போல சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

ஆமாம், ஷிகர் தவான் மற்றும் சுமன் கில் ஆகிய இருவரும் சிறப்பான தொடக்க ஆட்டத்தை ஏற்படுத்தி சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதுவரை ஷிகர் தவான் 49 மற்றும் சுமன் கில் 64 ரன்களை அடித்துள்ளனர். 17 ஓவர் முடிந்த நிலையில் 116 ரன்களை அடித்த நிலையில் சுமன் கில் விக்கெட்டை இழந்துள்ளார்.

இதேபோல சிறப்பாக பார்ட்னெர்ஷிப் செய்து 120 ரன்களை அடித்துள்ளது. இதேபோல் விளையாடினால், நிச்சியமாக குறைந்தது 350 ரன்களை சுலபமாக இந்திய அணியால் அடிக்க முடியும் என்பதில்சந்தேகமில்லை.

இந்திய அணியின் ப்ளேயிங் 11 விவரம் இதோ ;

ஷிகர் தவான், சுமன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்டுல் தாகூர், முகமத் சிராஜ், யுஸ்வேந்திர சஹால், பிரஷித் கிருஷ்ணா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here