அன்று ரோஹித்திற்கு தோனி செய்தது போல, இன்று ரோஹித் ஒரு சிறந்த முடிவை எடுத்துள்ளார் ; பயிற்சியாளர் பேட்டி

0

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடி வருகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி. இதுவரை நடந்து முடிந்த மூன்று போட்டியில் 2 – 1 என்ற கணக்கில் இந்திய கிரிக்கெட் அணி முன்னிலையில் உள்ளது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் அணிக்கு தொடக்க ஆட்டம் மட்டும் அமையவில்லை.

ஆமாம், இந்த ஆண்டு இறுதியில் ஐசிசி டி-20 உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து அணிகளும் தீவிரமான ஆலோசனையில் உள்ளனர். ஆனால், இந்திய அணிக்கு மட்டும் பெரிய சிக்கல் உள்ளது. யார் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவுடன் பார்ட்னெர்ஷிப் செய்ய போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 12 சர்வதேச டி-20 போட்டிகளில் மட்டும் தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன், ரிஷாப் பண்ட், இஷான் கிஷான், கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ் போன்ற வீரர்கள் ரோஹித் ஷர்மாவுடன் பார்ட்னெர்ஷிப் செய்து வந்தனர். ஆனால், இதுவரை எதுவும் சரியாக வரவில்லை என்பது தான் உண்மை.

ஆனால் நேற்று முன்தினம் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 74 ரன்களை விளாசியுள்ளார் சூரியகுமார் யாதவ். அதனால் இனிவரும் போட்டிகளில் அவர் தான் தொடக்க வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. அணியின் தொடக்க வீரர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை வைத்து தான் தோல்வியா ? வெற்றியா என்பது தெரியும்.

ரோஹித் சர்மாவை தொடக்க வீரராக மாற்றிய தோனி:

இந்திய அணியின் முக்கியமான வீரர்களுள் ஒருவர் தான் மகேந்திர சிங் தோனி. இதுவரை தோனி தலைமையிலான இந்திய அணி அனைத்து விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளனர். அதுமட்டுமின்றி, மிடில் ஆர்டரில் விளையாடி கொண்டு இருந்த ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக மாற்றியதும் தோனி தான். அதில் இருந்து ரோஹித் ஷர்மாவின் விளையாட்டு மிகவும் சிறப்பாக மாறியது.

இதனை பற்றி பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ஸ்ரீதர் கூறுகையில் ; “கடந்த 2013ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை போட்டிக்கு ரோஹித் ஷர்மாவை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று தோனி கூறினார். ஆனால் அந்த நேரத்தில் தினேஷ் கார்த்திக் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி கொண்டு இருந்தார்.”

” கேப்டன் தோனி முடிவு செய்ததால் மற்ற உறுப்பினரும் அதற்கு ஒப்புக்கொண்டனர். அதற்கு ஏற்ப ரோஹித் ஷர்மாவும் தொடக்க வீரராக சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல தான் இப்பொழுது மிடில் ஆர்டரில் விளையாடி கொண்டு இருந்த சூரியகுமார் யாதவை தொடக்க வீரராக அறிமுகம் செய்துள்ளார் ரோஹித் சர்மா. அதன்பின்னர் விராட்கோலி விளையாடுவார். ஒருவேளை விராட்கோலி இல்ல நேரத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 3வதாக பேட்டிங் செய்வார் என்று கூறியுள்ளார் ஸ்ரீதர்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here