டி-20 போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணியில் இருக்க வேண்டிய முக்கியமான வீரர் இவர் ; முன்னாள் வீரர் சேவாக் உறுதி ;

0

ஐபிஎல் 2022 : கடந்த மாதம் மார்ச் 26ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்த முறை புதிதாக இரு அணிகளை அறிமுகம் செய்துள்ளது பிசிசிஐ. அதுமட்டுமின்றி, இதுவரை வெற்றிகரமாக 24 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் பல சுவாரஷியமான நிகழ்வுகள் நடந்துள்ளது.

ஆமாம், இதுவரை ஐபிஎல் போட்டிகளில் அதிக போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள அணி என்றால் மும்பை மற்றும் சென்னை அணி தான். ஆனால் இந்த ஆண்டு அப்படியே தலைகீழாக மாறியுள்ளது தான் உண்மை. ஏனென்றால் புள்ளிபட்டியலில் இறுதி இடத்தில் மும்பை அணியும், 9வது இடத்தில் சென்னை அணியும் உள்ளது.

ஐபிஎல் போட்டி என்று வந்தால் போதும் ஒரு வீரரை பற்றி இன்னொரு வீரர் பேசுவது வழக்கம் தான். அதிலும் குறிப்பாக முன்னாள் வீரர்கள் அவ்வப்போது அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருவது வழக்கம் தான். அதேபோல தான் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் சமீபத்தில் அளித்த பேட்டியில் ;

” பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமான பவுலர் என்றால் அது ரபாட மற்றும் அர்ஷாதீப் சிங் தான். அதிலும் அர்ஷதீப் சிங் மிகவும் அற்புதமாக பவுலிங் செய்து வருகிறார். அவர் விக்கெட்டை கைப்பற்றவில்லை என்றாலும், அவரது பவுலிங் அருமையாக உள்ளது தான் உண்மை.”

“நம்ம ரபாட -விடம் அதிகமாக எதிர்பார்ப்போம், ஏனென்றால் அவர் ஒரு சர்வதேச போட்டிகளில் விளையாடும் வீரர். ஆனால் அர்ஷதீப் சிங், குஜராத் மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பக்காவாக பவுலிங் செய்துள்ளார். அதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை சரியாக பயன்படுத்த வேண்டும்.”

“அதுமட்டுமின்றி, அர்ஷதீப்-க்கு 18 மற்றும் 20 ஓவர் பவுலிங் கொடுக்க வேண்டும். ஸ்மித்திற்கு முன்னாடியே பவுலிங் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் சேவாக்.”

இதனை பற்றி பேசிய இந்தியா அணியின் முன்னாள் வீரரான பார்திவ் பட்டேல் கூறுகையில் : “கடந்த ஆண்டு போட்டியில் அர்ஷதீப் சிறப்பாக பவுலிங் செய்து வந்தார். குறிப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் -க்கு சிறப்பாக பவுலிங் செய்தார்.”

“வேகப்பந்து வீச்சாளருக்கு சவாலாக மாறியுள்ளார் அர்ஷதீப் , அதனை வெற்றிகரமாக நடத்தியும் வருகிறார்.அதுமட்டுமின்றி இவரது யாக்கர் பவுலிங் தான் முக்கியமான ஒன்று. எந்த நிலையிலும் ஒரே மாதிரி பவுலிங் செய்து வருகிறார். அதனால் இனிவரும் போட்டிகளில் இந்திய அணியில் இவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிச்சியமாக நல்ல அணியாக இந்திய அணி இருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார் பார்திவ் பட்டேல்.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here